Saturday, October 3, 2015

‪நிச்சயிக்கப்பட்ட விபச்சாரம்‬...!















அவள் 18 வயதை கடந்தால் என்பதை
அறிந்துகொண்ட சில புரோக்கர்கள்..!

வாரம் ஒருவர் என்ற கணக்கில்
தொடர்ந்து இருவாரம் வந்துசென்ற..!

பணம் படைத்த எட்டு பேரில்
ஒருவர் அவளை தேர்ந்தெடுத்தான்..!

தலைநிறைய பூ புதுப்புடைவை கட்டி
அவளை சந்தித்தான் நேருக்குநேர்..!

வசதி படைத்தவன் சரி என்றானாம்..!

புன்னகையுடன் புரோக்கர் சொன்ன வார்த்தையால்
வாயடைத்து நின்றால் அவள் வார்த்தையின்றி..!

அவளுக்கு தமிழ் வார்த்தை தந்து
உதவாததை வேட்கமென்றனர்; உடனிருந்தவர்கள்..!

பின் புரோக்கர்கள் முன்னிலையில் முடிவுசெயயப்படது
பணமும், இடமும், நேரமும்...!

அந்தநாளுக்கு மாதங்கள் சில காத்திருக்கக
வேண்டுமென்றார்கள்; அவள் வேண்டியும் இருந்தால்
என்றும் பேசாத பேச்சியம்மனிடம்..!

ஒருநாளுக்கு காத்திருக்க முடியாத அவன்
அலைபேசியிலேயே பாதி வாழ்கையை வாழ்ந்துவிட்டான்..!

அவளுக்கு விருப்பம் உள்ளதா என்றரியாமலயே
வந்தது அவனுள் அந்த நாளும்..!

நிலவும் வந்தது அவளும் வந்தால்
தனியறையில் அவனும் அவளும் தனிமையில்..!

இப்போது அவள் மனம் துடிக்கிறது
காதல் திருமணத்தின் சிறப்பு..!


இது நிச்சயிக்கப்பட்ட விபச்சராம்..!

No comments:

Post a Comment