வாலிப கவியே!...
உனது இந்த மரணம்,
காலத்திற்கோ தாமதம்,
கலைஞனான உங்களுக்கோ,
அது வெகு சீக்கிரம்!........
வாலிப கவியே!...
நீங்கள் இளமை காலத்திலே
மறைந்துவிட்டீர்!...
உங்கள் இளமையின் பொறாமை தாங்க முடியாத,
-எமதர்மராஜனோ,
தர்மமின்றி நடந்து கொண்டான்........!
கவிக்கு துணை இருந்தவன் நீ
-வாலி
உன் துணை இல்லாததால் - கவிக்கு ஆனது வலி !...
நீ கைபிடித்து எழுதிய
பேனாவும்,
நீ அழைக்காமல்,
உன்னை தேடி வந்த,
தமிழ் வார்த்தைகளும்,
உன்னைக்காணாமல் என்னாகுமோ!.....
உன்னை புகழ் வானளவு,
உயர்த்து நின்றபொழுதும் ,
உன் மனம் சிறு பிள்ளையை
போல் தான் இருந்தது!....
வாலிப கவியே!....
இன்னும் எத்தனை காலத்திற்கு தான்,
மனிதர்களுக்கே கவி எழுதிகொண்டிருப்பாய்?
அதால்னால் தான் என்னோவோ,
இறைவனுக்கு கவி எழுத,
உன்னை அவனிடத்திர்கே அழைத்துச்சென்றுவிட்டான்!.....
இந்த மரணம் உனக்கு மறைவு அல்ல,
உனக்கு கிடைத்த பதவி உயர்வு!......
இந்த மரணம் உனக்கு மறைவு அல்ல,
No comments:
Post a Comment