Saturday, October 3, 2015

வேண்டும் வரதட்சணை !.... ஏன்?எதற்கு?யாருக்கு? வேண்டாம்!...

வேண்டும் வரதட்சணை ..!

அந்த ஆணுக்கு வரதட்சணை வேண்டுமாம்?
ஆண் வரதட்சணை வாங்குவானா?

ஏன் வாங்குகிறான்?
அவன் அவனவளை(மனைவி)நேசிக்கவில்லையா?

என்னை இத்தனை ஆண்டுகள் வளர்த்த,
பெற்றோருக்கு எத்தனை செலவு ஆகியிருக்கும்!.....
- அதற்காக வேண்டும் வரதட்சனை.

நீ நாளை முதல் எத்தனை வருடம்
என்னுடன் வாழப்போகிறாய்?
- அதற்காக வேண்டும் வரதட்சனை.

நம் திருமணத்திற்காக
நான் வாங்கிய கடனைகட்ட!.....
- அதற்காக வேண்டும் வரதட்சனை.

என் பெற்றோரின் பேராசைக்காகவும்
உன் பெற்றோரின் கௌரவத்திற்காகவும்!.....
- அதற்காக வேண்டும் வரதட்சனை.

என் உடல் நலத்தில் எந்த குறையும் இல்லை!....
- அதற்காக வேண்டும் வரதட்சனை.

நேற்று வரை நடந்து சென்றுகொண்டிருந்தேன்,
உன்னை எப்படி நடக்கவைப்புது!...
- அதற்காக வேண்டும் வரதட்சனை.

நாளை முதல் என் அழகு மனைவி உன்னை,
சந்தோஷமாக பார்த்து "கொல்லப்போகிரேன்"!...
- அதற்காக வேண்டும் வரதட்சனை.

நமக்கு பெண் குழந்தை பிறந்தால்?
அவள் திருமணத்திற்கு
வரதட்சணை கொடுக்கவேண்டும்!...
- அதற்காக வேண்டும் வரதட்சனை.

வரதட்சனை வாங்காவிட்டால்,
இந்த சமூகம் என்ன நினைக்கும்!....
- அதற்காக வேண்டும் வரதட்சனை.

வேண்டாம் வரதட்சணை ...!

எனக்கு வேண்டாம்!...
நான் ஆண்!...

எனக்கு வேண்டாம்!...
என்னவளை,
என் உயிருக்கு நிகராக நேசிக்கிறேன்!...

என்னவள் ஆசைப்பட்டதை,
நான்தான் வாங்கித்தருவேன்!...
- அதற்காக வேண்டாம் வரதட்சனை.

இருசக்கர வாகனம் இருந்தாலும்,
அவளுடம் தனிமையில் நடப்பதே,
எனக்கு இனிமையாக இருக்கிறது!...
- அதற்காக வேண்டாம் வரதட்சனை.

வேண்டும் என்பதற்கு ஆயிரம்,
காரணம் இருக்கலாம்!....

வேண்டாம் என்பதற்கு எத்தனை,
காரணம் சொன்னாலும் அத்தனையும்,
என் காதல் ஒன்றையே விளக்கும்!......

ஒரு வேலை நான் வரதட்சனை வாங்கினால்,
கோவில் உண்டியலிலிடும் காணிக்கையை போல்..!
பக்தன் விரும்பி அளிப்பது!...
பக்தனுக்கும் வருத்தமில்லை !..

கடவுளும் அதை கண்டுகொள்ளப்போவதில்லை!....

No comments:

Post a Comment