Tuesday, November 22, 2016

காதல் செய்தேன்.













காதல் செய்தேன்.
கற்புள்ள கன்னியரை
மட்டும் அல்ல...

மெரினா கடற்கரையில்
நடப்பது போல் சாலையில்
என்னை கடந்து செல்லும்
கிழவியை - காதல் செய்தேன்.

வேகமாய் என்னை கடந்து 
சட்டென்று  வாகனத்தை நிறுத்தி
நாய்குட்டிக்கு வழிவிட்ட
நண்பரை -காதல் செய்தேன்.

என் முகம் அறியாமல்
புன்னகை செய்யும் மழலையின்
இதழ்களை -காதல் செய்தேன்.

வேகத்தடையில் ஏறி இறங்கும்
ஒரு நொடியில் என்னை
முந்திச்சென்ற மிதிவண்டி
சிறுவனை -காதல் செய்தேன்...

நிறுத்தம் வந்ததும்
இருக்கையில் அமர்ந்திருந்த
முதியவர் இறங்கும்முன்..
நீ உக்காருப்ப !!! என்றார்
அவரையும்  -காதல் செய்தேன்.

நான் வாங்கிகொடுத்த
பனிக்குழைவை சாப்பிடத்தெரியாமல்
என் மேல்சட்டையில் கொட்டிய
என்மகளை – காதல் செய்தேன்.

அருகில்!!
அவள் வாயை பார்த்துகொண்டிருந்த
அவள் வயதுடைய வேறொருவர்
மகளையும் - காதல் செய்தேன்.

வேறொரு பனிக்குழைவை
கையில் கொடுத்து....

காதல் செய்
எல்லாவற்றையும்
காதல் செய்....

சுவாசிக்க மறந்து
சுடுகாடு செல்லும் வரை
காதல் செய்..!!!

சுடுகாட்டிற்கு பின்
சொர்க்கம் வருமா
என்று தெரியாது...

கா-த-ல் செ-ய்
நீ சாகும் முன்னரே
சொர்கம்  காணலாம்...



காதலுடன்,
பாமரன் பா.பரத்