நல்ல வேலை
நல்ல சம்பளம்
ஆடம்பரம் இல்லாத
அளவான வாழ்க்கை...!
வார இறுதியில்
ஊரை சுற்றி சுற்றுலா...!
சொந்தங்கள் இல்லாவிட்டாலும்
சொல்லிக்க ஒரு சொந்த வீடு..!
இவைதான் இன்றைய வாழ்வின்
இன்றியமையாத தேவைகள் என்கிறார்கள்
இயந்திரமாய் வாழும் பலர்...!
ஒன்பது மணிக்கு வேலை..!
மகிழுந்தில் செல்பவன்
இருசக்கர வாகனத்தில் செல்பவனை
மதிப்பதில்லை
இருசக்கர வாகனத்தில் செல்பவன்
பேருந்தில் செல்பவனை மதிப்பதில்லை
பேருந்தில் செல்பவன்
நடந்து செல்பவனை மதிப்பதில்லை
நடந்து செல்பவனோ
மகிழுந்தில் வருபவனை மதிப்பதில்லை..???????
ஏனென்று கேட்டால்...!
இருவரும் கூறும் ஒரே பதில்
"அவன் என்ன மதிக்கல"...!
மொத்தத்தில் எவருமே
அவரவரையும் மதிக்கவில்லை
பிறரையும் மதிப்பதில்லை
அதுவே உண்மை...!
இப்படிப்பட்ட ஒழுக்கமான எந்திரத்திடம்
மனித ஒழுக்கத்தை எதிர்பார்ப்பது
என்னை மடையன் என்று
மீண்டும் ஒருமுறை உணரவைக்கிறது...!
ஆனா இதெல்லா எப்படி வந்துச்சு....?
பனிரெண்டு வருடம்
படிச்ச படிப்பு
கல்லூரிக்கு பயன்படல...!
கடன்வாங்கி கல்லூரியில் படிச்ச
பட்டப் படிப்பு வேலைக்கு பயன்படல...!
ஒழுக்கமா படிக்கலையா?
இல்ல
ஒழுக்கமா சொல்லி தரலையா....?
இது
இலவச கல்வியா????
இழிவான கல்வியா?????
ஒழுக்கமா வேலைக்கு போகனுன்னு
பொறுப்பா வேலைக்கு போனவனுக்கு....!
வேலை கிடச்சது
வாங்கிய பட்டத்திற்கு இல்ல
கொடுத்த பணத்திற்கு...!
நீ வேலைக்கு ஆள் எடுக்கிறாயா ??????
பணத்திற்கு ஆள் எடுக்கிறாயா ????????
ஓட்டுனர் உரிமம் வாங்கியும்
வண்டி ஓட்டி பழகல...!
ஓட்டுனர் உரிமம்
ஓட்டிபழகியவர்களுக்கா ?????
ஓட்டிபழகுபர்களுக்கா ?????????
வேகமா போகும் வண்டிய
வணிக சந்தைல வித்துட்டு...!
வேகத்தடை சட்டம்போடும்
அமைச்சர்கள்...!
வண்டி
மக்களுக்கா??????
வியாபாரத்திற்கா??????
வேகமாய் வந்தவனை
வெக்கமே இல்லாம
காசவாங்கிட்டு விட்டுவிடும்
காவல்துறை...!
சட்டம்
திருந்தவா ????
திருடவா ?????????
மணிக்கு 60 கி.மீ வேகம் செல்லும்
வாகனத்தை கையில் கொடுத்துவிட்டு
40க்கு மேல போகாதப்பா என்று சொல்லும்
அப்பாக்கள் தான் இங்கு அதிகம்...!
கேட்டா பாசம்னு சொல்றாரு...!
இது
பாசமா?
பெருமையா ???
தனி மனித ஒழுக்கத்தை பேசுபவன்
பிறரை குறை கூறமாட்டான்...!
தன்னைத் திருத்திக்கொள்வான்...!
உங்களை குறை கூறும்முன்
திருந்திகொள்கிறேன்...!
பின்னர் திருந்தாதவர்களை
கொல்கிறேன்....!