Thursday, March 24, 2016

நண்பா கவனம்

மது மாது
இவர்கள் இருவரும்
இருசக்கர வாகனத்தில்
எதிரிகள்....!

பயணத்தின் பொது
இருவரையும் தீண்டாதே
பின் வீடுதிரும்புவது சிரமம்...!
எனவே நண்பா கவனம்...!

சாலை விதிகளை
மதிப்பவர்களை விட,
மீறுபவர்கள் தான் அதிகம்....
எனவே நண்பா கவனம்...!

வேகமாய் முந்துபவனிடம் ,
நியூட்டனின் மூன்றாம் விதியை
பயன்படுத்தாதே...

பின் அது உன் விதியை
முடித்துவிடும் அதே விதிப்படி.....
எனவே நண்பா கவனம்...!

நமது சாலைகளில்
இரண்டு கால்கள்
கொண்ட கால்நடைகள்
அதிகம்....
எனவே நண்பா கவனம்...!

இரவு 10 மணிக்கு மேல்,
சாலைகளில் நடுவே
தவழும் சகோதரர்கள் அதிகம் ....
எனவே நண்பா கவனம்...!

வாகனத்தின் நகழ்களின்
கோப்பை எப்போதும் வைத்திரு,
ஆங்காங்கே நின்றுகொண்டிருக்கும்
கொள்ளையர்களிடமிருந்து உன்னை
பாதுகாக்கும்...!
எனவே நண்பா கவனம்...!

கவலைகளை வீட்டில் வை
கவனத்தை சாலையில் வை

ஆசை முத்தத்துடன் வழியனுப்பிய தாரம்
அக்கறையோடு பாத்து போப்பா என்ற தாய்
அன்போடு டாட்ட சொன்ன பிள்ளை,

இவர்கள் காத்திருப்பது
உன்வருகக்குத்தானே தவிர,
உன் பிணத்தின் வருகைக்கு அல்ல...!


எனவே நண்பா கவனம்...!

No comments:

Post a Comment