காதலியர் என்று
என்னல் வேண்டாம்..!
எனக்காக காத்து நின்றவர்கள்
என்றே பொருள்படும்..!
என் தாயிர்கே என்னை
அறிமுகம் செய்த செவிலியர்..!
என் தந்தைக்கு என்னை
அறிமுகம் செய்த தாய்..!
நானே எனக்கு அறிமுகம்
செய்துகொண்ட என் தங்கை..!
எனக்கே என்னை
அறிமுகம் செய்த
ஆசிரியை..!
அவளுக்கு என்ன
அறிமுகம் செய்துகொண்டு
என்னை அறிந்து கொண்டவள்
என்னவள் :-)
நாம் அறிமுகம் செய்து கொண்டோம்
அறியாதவர்களாய்...!
அறிந்து கொண்டோம்
அன்பு அண்ணனாய்..!
கல்லூரியில் பிரியா விடைபெற்றோம்
கண்களில் கண்ணீரோடு..!
காலம் கரைந்தது..!
கடந்தவை யாவும் மாறிட,
மாறாமல் நிற்கிறது
என் அன்பு தங்கைகளின்
அன்பு..!
என் தாய் வயற்றில்
நீ இல்லை,
உன் தாய் வயிற்றிலும்
நான் இல்லை..!
இல்லை என்றது இல்லாமல் போக
இருக்கிறது நம் உறவு..!
என் அன்பு தங்கைகளுக்கு
அண்ணனின் வரிகள்..!
No comments:
Post a Comment