Thursday, March 24, 2016

மீண்டும் ஒரு புதிய புத்தாண்டு

கண்களில்
கண்ணீருடன்
2015 ஆம் ஆண்டை
வரவேற்றது 2014...!

சென்ற ஆண்டில்
செய்த தவறை
மன்னித்து...!

வந்த ஆண்டை
வருத்தமின்றி
வாழ்வாயாக...!

வாழ்வில்
எது வந்தாலும் சரி
ஏமாற்றம் தந்தாலும் சரி...!
எதிர்த்து நில்...!
நம்பிக்கையுடன்....!

ஒருபோதும் நிற்காதே
நான் என்ற கர்வத்தோடு
நில் நாம் என்ற உணர்வோடு...!

முடிந்தவரை சேர்த்திடு...!
புன்னகையை
பொன் நகையை அல்ல...!

பெருமைகொள்
பாசத்திற்கு அடிமை என்று
பணத்திற்கு அல்ல...!

புது முடிவுகள் பலயெடுத்து
புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும்
நீங்கள்...!

முடிந்தவரை உதவி
செய்யுங்கள்
முடியாதவர்களுக்கு...!

இந்த ஆண்டு
இனிய ஆண்டாக
அமைய என் வாழ்த்துக்கள்...!

 பாமரன் பா.பரத்

No comments:

Post a Comment