சிங்கங்களிடம்
பிறப்பால் நீ யார் என்றேன்...?
சிரித்தபடி..!
பிறப்பால் நாங்கள் சிங்கம் என்றது...!
நாய்களிடம்
பிறப்பால் நீ யார் என்றேன்...?
சிரித்தபடி..!
பிறப்பால் நாங்கள் நாய் என்றது...!
கழுதைகளிடம்
பிறப்பால் நீ யார் என்றேன்...?
சிரித்தபடி..!
பிறப்பால் நாங்கள் கழுதை என்றது...!
பன்றிகளிடமும் கேட்டுவிட்டேன்
பிறப்பால் நீ யார் என்று...?
சிரித்தபடி..!
பிறப்பால் நாங்கள் பன்றி என்றது...!
மனிதர்களிடம்
பிறப்பால் நீ யார் என்றேன்...?
ஒருவன்
பிறப்பால் நான் இஸ்லாம் என்றான்...!
மற்றொருவன்
பிறப்பால் நான் கிறிஸ்துவன் என்றான்...!
வேறொருவன்
பிறப்பால் நான் இந்து என்றான்...!
அட படித்த மடையர்களா
பிறப்பால் நாம் அனைவரும்
மனிதனடா மனிதன்...!
பிறப்பால் நாம்
மனிதன் என்பதையும் மறந்து..!
வாழும் வாழ்கையில்
மனிதநேயத்தையும் மறந்து...!
மதநேயம் நேயத்தோடு
வாழும் மானங்கெட்ட மனித இனம்
மிருகத்துடன் ஒப்பிடக்கூட
தகுதி இல்லாதவன்....!
இனி பிறக்கும் உயிர்களுக்காவது
நாம் மனிதன் என்பதயும்
மனிதநேயத்துடன் வாழவேண்டுமென்பத்தையும்
கற்றுக்கொடுங்கள்...!
பட்டம் பெற்ற முட்டாள்களா...!
உங்களிடம்
பகுத்தறிவு இல்லாவிட்டாலும் சரி
பகுதி அறிவோடாவது
செயல்படுங்கள்....!
இந்த உலகம்
சொர்கமாக மாறும்...!
No comments:
Post a Comment