சாலையில் செல்லும் மனிதன்
குறுக்கே வந்த நாய்க்கு வழிகொடுத்து
மனிதர்க்கு வழிகொடுக்க
மறுக்கிறான்!!!
தன் நாய்தாபி மானத்தை காப்பாற்றிக்கொண்டு
மனிதாபிமானத்தை
தவறவிட்டான்..!
கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று நடக்குது
ஒவ்வொரு சாலை சைகை விளக்கு முற்றத்திலும்..!
என் பாரதிக்கு அன்றே புலப்பட்டது!
முந்தி செல்பவனை
முந்தநினைக்கும் மனிதன்
பிந்தி வருபவனை மனிதனென்றே நினைப்பதில்லை ..!
பிந்தி வருபவனை மனிதனென்றே நினைப்பதில்லை ..!
அற்ப மனிதனாக எண்ணாவிட்டாலும்
சரி,
ஒரு உயிர் என்று கூட
எண்ணமில்லை....
இப்படி நடுத்தர சண்டைகள்
ஒரு புறம் இருக்க...
மகிழுந்தில் செல்லும்
நண்பர்கள்,
என் மனிதர்களை தீண்டாமல்
செல்ல நினைகிறார்கள்...!
மனிதாபிமானத்தின்
அடிப்டையில் அல்ல
மகிழுந்தாபி மானத்தின் அடிப்படையிலேயே....
தீண்டாமல் இருப்பினும் தீண்டாமை நன்று !
உங்கள் அகராதியில் இந்த
வார்த்தை தொலைந்திருந்தால்
சற்று யோசித்து மீண்டும் சேர்த்துக்கொள்ளுங்கள்
சற்று யோசித்து மீண்டும் சேர்த்துக்கொள்ளுங்கள்
மனிதாபிமானம்!!!