Saturday, April 2, 2016

முத்தத்தில் வாழ்வின் ருசி !

பல நாட்களாக புழங்காமல் கிடந்த காதல்
இன்று புழக்கத்திற்க்கு வந்துள்ளது
உன்னால்..!

காதலின்றி பூட்டிக்கிடந்த மனதை,
பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறாய்..!

புன்னகை மறந்த இதழ்களை
புன்னகைக்க செய்கிறாய்..!

வளம் இழந்த வாழ்வை
வளம்பெற செய்கிறாய்..!

கண்ணீர் துளிகளால் நனைந்திருந்த
கன்னங்களை எச்சில் கொண்டு துடைக்கிறாய்..!

நீ அறியாமல் செய்யும் சிறு அசைவும்
என்னை அறியச்செய்கிறாய்..!

வாழ்வில் அர்தங்கள் இழந்த வேலையில்,
வாழ்க்கைக்கே அர்த்தமாகிறாய்..!

முடியுமா என்ற கேள்விகளுக்கு,
முடியும் என்றே முத்தத்தில் பதிலளிக்கிறாய்..!

நினைவுக்கெட்டிய நினைவுகள்யாவும்
நினைவில் இல்லை உன்னால்..!

ஆயிரம் காதல்களில்
தோல்வி கண்டவனும்
கரைந்திடுவான்..!

புரியாமல் பேசும்
உன் மழலை மொழி முன்...!

நானும் கரைந்தேன்..! கரைகிறேன்..!

மொத்தத்தில்
ஒற்றை முத்தத்தில்
வாழ்வின் ருசியை
அறியவைத் -தாய் நீயே...!

என் மகளே..!
- ஆதிரா

ஒருத்தியின் செல்ல மகள்













அலுவலகத்திலிருந்து வேகமாய்
வீடுதிரும்ப நினைத்த என்னை...!

ஊர்வலம்போல் ஊர்ந்து வரச்செய்தது
எனக்கு முன்சென்ற
மழலையின் சிரிப்பு...!

தெரிந்த பலர் சொல்லாமல்
விலகும் நேரத்தில்,
தெரியாத இந்த மழலை
கையசைத்து டாட்டா என்றதும்
மனமுருகிப்போனது...!

மங்கையர் பலரிடம்
கிடைக்காத காதலை,

சட்டென்று கொடுத்துவிட்டால்
முகம்தெரியாத மங்கை
ஒருத்தியின் செல்ல மகள்..!

சிரிப்பு என்னும் மந்திரத்தால்...!

அன்புடன்,
பாமரன் பா.பரத்