அலுவலகத்திலிருந்து
வேகமாய்
வீடுதிரும்ப
நினைத்த என்னை...!
ஊர்வலம்போல்
ஊர்ந்து வரச்செய்தது
எனக்கு
முன்சென்ற
மழலையின்
சிரிப்பு...!
தெரிந்த பலர்
சொல்லாமல்
விலகும்
நேரத்தில்,
தெரியாத இந்த
மழலை
கையசைத்து
டாட்டா என்றதும்
மனமுருகிப்போனது...!
மங்கையர்
பலரிடம்
கிடைக்காத காதலை,
சட்டென்று
கொடுத்துவிட்டால்
முகம்தெரியாத
மங்கை
ஒருத்தியின்
செல்ல மகள்..!
சிரிப்பு
என்னும் மந்திரத்தால்...!
அன்புடன்,
பாமரன் பா.பரத்
No comments:
Post a Comment