Saturday, October 3, 2015

வேண்டும் மாற்றம்!....

நம் கால்கள் தரையை கண்ண்டால்
காலனியை தேடும்!...

செருப்பு தைக்கும் தொழிலாளியின் கால்களோ
தரையை முத்தமிட்டுக்கொண்டே செல்கிறது !......

நம் மானம் காக்க பல உயிர்களை
கொன்று ஆடை நெய்யும் நேசவன்!...

நம் ஆடம்பர வாழ்க்கைக்காக
அவன் உயிரையும் எடுக்க துணிந்துவிட்டோம்!...

உழவன் பட்டினியுடன்
சேற்றில் கால்வைத்தால் தான்!...

நாம் பசியாற
சோற்றில் கை வைக்க முடியும்!..

நம் வீடு பிரகாசிக்க
உயிரை துச்சமாக நினைத்தான்
மின் தொழிலாளி!...

இருந்தும் என்ன பயன்
அவள் பிள்ளைகள் இன்னமும்
மெழுகுவர்த்தி ஏற்றித்தான் படிகிறார்கள்!...

என்ன கொடுமை பார்தீர்கள,
உன்ன உணவுகொடுததவனுக்கு
உணவில்லை,

உடுத்த ஆடை நெய்தவனுக்கு
ஆடை இல்லை,

இது மாறுமா?

No comments:

Post a Comment