Friday, October 21, 2016

மானம் கெட்ட சமுதாயத்தில்

கருவறையில் கருவாய் 
தங்கியதுமே,
கல்லறையில் பிணமாய் 
தூங்குவதும்,
கட்டாயமான ஒன்று!

பிறப்பது யாராயினும்
பிரிவது உறுதி.
உலகைவிட்டு !

பிறகு ஏன் இந்த பிரிவினை ?

உருக்கமாயிருந்த 
உடையவரும்,
உற்சாகமாயிருந்த 

உறவினரும்,
ஒரு நொடி 

சிந்தித்தே 
சிரித்தனர்...

பிறந்தது பெண் குழந்தையென்றதால்...



தாயின் வயிற்றிலிருந்து
பிறந்த குழந்தையை...

வயிற்றுக்கு கீழேபார்த்து,
வாழும் தகுதி உறுதிசெய்கிறார்கள்,
வயிற்றுக்கு மேலே இதயம் இல்லாத,
வாயடி வயோதிகர்கள் சிலர்..

வாழ்வை வாழ தெரியாமல் வாழ்ந்த,
வாழாவெட்டி உறவினர்களும்
அதிலடங்கும் !...

பல வெட்டி சத்தங்களுக்கிடையில்...
என் தாய் மலட்டுத்தன்மையற்றவள்,
என்பதை உலகுக்கு உரக்க சொன்ன,
குட்டி தேவதையின் அழுகிறாள் !...

பூமிக்கு வந்த புது மலர்,
தோட்டத்தில் பூத்த புன்னகை பூ..

என் மகளே!
எழுந்துவா!..
எதிர்கொள்!..
எதிர்த்து நில்!

உன் விரலசைவில்
இவ்வுலகம் உனதாகும் !

ஆண்டுகள் பல கடந்ததும்,
நீயும் பாராட்டப்படுவாய்......

இதே மானம் கெட்ட சமுதாயத்தில்.....

பாமரன்.பா.பரத்

No comments:

Post a Comment