Saturday, November 5, 2016

ஆடம்பரக்கொலை....












காலையில் என் துயில் 
கலைக்கும் குருவி.

இன்று கவலையுடன் 
தத்தளிக்கிறது தெருவில்
தன் தாயுடன்..!

குருவிக்கோ கூடில்லை
எனக்கோ உறவில்லை..!

பசித்தபோதெல்லாம்
எனக்குணவளித்த
என்கிழவியை இன்று
 
காலையிலிருந்து
காணவில்லை..!

தொண்டை வரண்டபோதெல்லாம்
இளநீர் வெட்டிக்கொடுக்கும்
நரை கிழவனும் இன்றில்லை..!

அமைதியின்றி
அமைதியான
 
சாலையில் தனியே
 
செல்லும்போது
என்னை கட்டித்தழுவிய
என்காதலும் இன்றில்லை...!

ஞாயிறு என்னை சுட்டெரிக்கையில்
என்னை அரவனைத்துக்கொண்ட
என்னன்னையும் இன்றில்லை..!

சாலையில் சொல்லும்போது
இருபுறமும் நின்றிகொண்டிருந்த
 
என் உறவுகள் யாரும்
 இன்றில்லை...!

ஆம், 
எல்லாம் முடிந்தாயிற்று
வெட்டியும் வீழ்த்திவிட்டார்கள்
வித்தும் தின்றுவிட்டார்கள்..!

உயிரிழந்தும் காத்திருகிறது..!

மானம்கெட்ட மானுடர்
சமூகத்திற்கு உதவிட....!

வெட்டியபின் பேசுவதில் அர்த்தமில்லை
வெட்டிப்பேச்சில் மதிப்பில்லை
பணம் பேசுகையில் மறுப்பில்லை..!
இதுவே என் சமூகம்...!

தடுக்க நாதியின்றி
மரமென்றோயிரை
வெட்டிவீசியபோது
வெட்கமேயின்றி
வெடிகைப்பார்த்த
உங்களில் ஒருவன்
நான்..

பாமரன் பா.பரத்..!

No comments:

Post a Comment