Saturday, October 3, 2015

புரட்சி...! புரட்சி...! புரட்சி...!

காதலிக்கு செலவு
செய்வதற்கென்றொரு கூட்டம்...!

செலவு செய்வதர்க்கொரு
காதலி இல்லையென்றொரு கூட்டம்...!

மதுவருந்த செலவு செய்வதற்கென்றொரு கூட்டம்...!
யார்செலவில் மதுவருந்துவதென்றொரு கூட்டம் ...!

கைபேசி வாங்குவதர்கென்றொரு கூட்டம்...!
கைபெசியே இல்லையென்றொரு கூட்டம் ...!

திரைப்படம் பார்ப்பதர்க்கென்றொரு கூட்டம்...!
திரைப்பட சுவர்ப்பலகையை பார்தபடியொரு கூட்டம்...!

கோவில் கருவறைக்குள்ளொரு கூட்டம் ....!
கடவுளை தொழுதபடியொரு கூட்டம்...!

ஆனால்,

அடுத்தவேளை உணவுகிடைகுமா???
என்றும்மொரு கூட்டம்...!

தூங்கிய இரவு விழிக்குமா???
என்றும்மொரு கூட்டம்...!

இந்த உலகில் தன் வாழ்நாளை
எண்ணிக்கொண்டுமொரு கூட்டம்...!

ஆம்,சாலை ஓரங்களில் இவர்கள் வீடு...!

வீட்டின் கூரை ஓலையால் செய்ததல்ல
சீலையால் செய்தது...!
நம் வீடு ஒழுகினால் பாத்திரம் தரைக்கு மேல்...!
இவர்கள் வீடு நனைந்தால் பாத்திரம் தலைக்கு மேல்...!

பார்ப்பதும் பகிர்வதும்...!
ஒருபோதும் மாற்றத்தை ஏற்படுத்தாது....!

புரட்சி...! புரட்சி...! புரட்சி...!

புரட்சி தோல்வியை சந்தித்ததென்றொரு

வரலாறு உண்டா?????

யார் "இவர்"?.

யார் "இவர்"?.
இந்த உலகம்
இவரை மறந்திட்டதோ
?
உலக சிறந்தவர்களில்
இவரும் ஒருவர்....!

ஏனோ ...!
அந்த பட்டியலில்
இவர் பெயர்
இன்னும் இடம் பெறவில்லை..!

அன்புள்ளம் கொண்டவர்
அடக்கமாய் இருப்பவர்...!

இயல்பாய் இருப்பதே
இவர் சிறப்பு...!

சராசரி மனிதைப்போல் அல்ல
சராசரி மனிதனாகவே வாழ்பவர்...!

இதுவரை இந்த ஊடகம்
இவரை திரும்பி பார்த்ததில்லை...!

இவர் உடலை
 உயிர் பிரியுமுன் ...!
ஊடகம் இவரை உட்காரவைத்து உரையாடும்..!

பலர் இவரை தோற்கடிக்க காத்திருக்கின்றனர் ...!
பலர் இவரிடம் தோற்பதற்கும் காத்திருக்கின்றனர்...!

இவரை பலர் கண்டுகொள்வதை
இவர் அப்பலரை கண்டுகொள்வதில்லை...!

காரணம் இவர்
வெல்வதற்கு பிறந்தவர்...!

இவர்பற்றிய முதல்பதிவு
என்னுடையது என்பது
எனக்கு பெருமையே...!

இவர் பிரபலமா?
யார் "இவர்"?

ஏன் இவர்..!
பிரபலமான ஒருவராகத்தான்
இருக்கவேண்டுமா
???

ஏன் நம்மில் ஒருவராகஅல்லதுநானாக,
நாமாக,
நம் அனைவருமாக
இருக்கக்கூடாதா
???????

எனக்குள் ஒருவன்
நமக்குள் ஒருவன்
உனக்குள்ளும் ஒருவன்...!

அந்த "இவர்" அவர்" நீ " "நீயே தான் "

 "Sir Please oru Autograph"...!

மௌனம்..!

வாயடைத்து வார்த்தையின்றிப் போவது
மௌனம் அல்ல..!

தனக்குள் பேசிக்கொள்வதும்
பிறரை பேசாமல் கொல்வதும்

தான் மௌனம்...!

வெற்றி வெற்றி வெற்றி!..

மனிதன் வாழ்வில் தோல்வி
என்ற ஒன்று இல்லவே இல்லை !...

நீ மனிதனாக பிறந்திருக்கிறாய்,
என்பது உண்மை என்றல்,
நீ பல வெற்றிகளை கண்டவன்
என்பதும் உண்மை தான் !..

உன் தாயில் கருவிலிருந்து,
நலமான ஒரு சிசுவாக பிறந்திருக்கிறாய்,
அதுவே உன் முதல் வெற்றி!....

இன்று நீ உயிருடன் இருக்கிறாய்,
அப்படி என்றல் மரணம் உன்னிடம்,
இன்று வரை தோற்றுக்கொண்டிருக்கிறது தானே !....

இப்படி ஒவ்வரு நாளும்,
உனக்கு தெரியாமல் பல வழிகளில் நீ,
வெற்றி பெற்று கொண்டுதான் இருக்கிறாய்!....


உங்கள் வெற்றிகள் தொடர என் வாழ்த்துக்கள்!...

வாலி

வாலிப கவியே!...

உனது இந்த மரணம்,
காலத்திற்கோ தாமதம்,
கலைஞனான உங்களுக்கோ,
அது வெகு சீக்கிரம்!........

 வாலிப கவியே!...
நீங்கள் இளமை காலத்திலே
மறைந்துவிட்டீர்!...

உங்கள் இளமையின் பொறாமை தாங்க முடியாத,
-எமதர்மராஜனோ,
தர்மமின்றி நடந்து கொண்டான்........!

 கவிக்கு துணை இருந்தவன் நீ -வாலி
உன் துணை இல்லாததால் - கவிக்கு ஆனது வலி !...

 நீ கைபிடித்து எழுதிய பேனாவும்,
நீ அழைக்காமல்,
உன்னை தேடி வந்த,
தமிழ் வார்த்தைகளும்,
உன்னைக்காணாமல் என்னாகுமோ!.....

 உன்னை புகழ் வானளவு,
உயர்த்து நின்றபொழுதும் ,
உன் மனம் சிறு பிள்ளையை
போல் தான் இருந்தது!....
 வாலிப கவியே!....

இன்னும் எத்தனை காலத்திற்கு தான்,
மனிதர்களுக்கே கவி எழுதிகொண்டிருப்பாய்?


அதால்னால் தான் என்னோவோ,
இறைவனுக்கு கவி எழுத,
உன்னை அவனிடத்திர்கே அழைத்துச்சென்றுவிட்டான்!.....

இந்த மரணம் உனக்கு மறைவு அல்ல,
உனக்கு கிடைத்த பதவி உயர்வு!......

வேண்டும் வரதட்சணை !.... ஏன்?எதற்கு?யாருக்கு? வேண்டாம்!...

வேண்டும் வரதட்சணை ..!

அந்த ஆணுக்கு வரதட்சணை வேண்டுமாம்?
ஆண் வரதட்சணை வாங்குவானா?

ஏன் வாங்குகிறான்?
அவன் அவனவளை(மனைவி)நேசிக்கவில்லையா?

என்னை இத்தனை ஆண்டுகள் வளர்த்த,
பெற்றோருக்கு எத்தனை செலவு ஆகியிருக்கும்!.....
- அதற்காக வேண்டும் வரதட்சனை.

நீ நாளை முதல் எத்தனை வருடம்
என்னுடன் வாழப்போகிறாய்?
- அதற்காக வேண்டும் வரதட்சனை.

நம் திருமணத்திற்காக
நான் வாங்கிய கடனைகட்ட!.....
- அதற்காக வேண்டும் வரதட்சனை.

என் பெற்றோரின் பேராசைக்காகவும்
உன் பெற்றோரின் கௌரவத்திற்காகவும்!.....
- அதற்காக வேண்டும் வரதட்சனை.

என் உடல் நலத்தில் எந்த குறையும் இல்லை!....
- அதற்காக வேண்டும் வரதட்சனை.

நேற்று வரை நடந்து சென்றுகொண்டிருந்தேன்,
உன்னை எப்படி நடக்கவைப்புது!...
- அதற்காக வேண்டும் வரதட்சனை.

நாளை முதல் என் அழகு மனைவி உன்னை,
சந்தோஷமாக பார்த்து "கொல்லப்போகிரேன்"!...
- அதற்காக வேண்டும் வரதட்சனை.

நமக்கு பெண் குழந்தை பிறந்தால்?
அவள் திருமணத்திற்கு
வரதட்சணை கொடுக்கவேண்டும்!...
- அதற்காக வேண்டும் வரதட்சனை.

வரதட்சனை வாங்காவிட்டால்,
இந்த சமூகம் என்ன நினைக்கும்!....
- அதற்காக வேண்டும் வரதட்சனை.

வேண்டாம் வரதட்சணை ...!

எனக்கு வேண்டாம்!...
நான் ஆண்!...

எனக்கு வேண்டாம்!...
என்னவளை,
என் உயிருக்கு நிகராக நேசிக்கிறேன்!...

என்னவள் ஆசைப்பட்டதை,
நான்தான் வாங்கித்தருவேன்!...
- அதற்காக வேண்டாம் வரதட்சனை.

இருசக்கர வாகனம் இருந்தாலும்,
அவளுடம் தனிமையில் நடப்பதே,
எனக்கு இனிமையாக இருக்கிறது!...
- அதற்காக வேண்டாம் வரதட்சனை.

வேண்டும் என்பதற்கு ஆயிரம்,
காரணம் இருக்கலாம்!....

வேண்டாம் என்பதற்கு எத்தனை,
காரணம் சொன்னாலும் அத்தனையும்,
என் காதல் ஒன்றையே விளக்கும்!......

ஒரு வேலை நான் வரதட்சனை வாங்கினால்,
கோவில் உண்டியலிலிடும் காணிக்கையை போல்..!
பக்தன் விரும்பி அளிப்பது!...
பக்தனுக்கும் வருத்தமில்லை !..

கடவுளும் அதை கண்டுகொள்ளப்போவதில்லை!....

உள்ளம் உள்ள உயிர்-எழுத்து!!!


அன்பு இருந்தால் போதும்
ஆண்டவன் கூட தேவை இல்லை...!

இன்றே
ஈகைக்கு உதவிடு...!

உள்ளத்தில் அன்பு
ஊற்று போல பொங்கட்டும்..!

எது வந்தாலும்
ஏற்றத்திற்கு உதவிடு..!

ஐயோ என்று அழுவோர்க்கு

ஒப்பற்று உதவிட

ஓடோடி வாருங்கள்...!

ஏக்கம்!!!!

இன்று நீ வருவாயா,
இன்று என்னை சந்திப்ப்பாயா,
இன்றுடன் உன்னை கண்டு
நாட்கள் பல கடந்தன!...

பக்கத்து மாடி வீட்டிற்கு வந்த உனக்கு,
அருகில் இருக்கும் இந்த ஏழை வீட்டிற்கு
வர நேரம் இல்லையோ?

நான் மட்டும் அல்ல,
என் வீட்டில் அனைவரும்,
உன்னை காண துடிகின்றனர்!...

நான் உன்னை மறந்து
உறங்கச்சென்றேன்!
ஆனால்,

உறக்கமோ என்னை மறந்து
உன்னையே
நினைத்துக்கொண்டிருக்கிறது!...

இதற்க்கு மேலும் நீ,
வரவில்லை என்றல்
நாங்கள் மரணிப்பதை
தவிர வேறு வழி இல்லை!...

இப்படிக்கு,
ஒரு ஏழை சிறுவனின்
ஒருவேளை உணவுக்கான
ஏக்கம் .


பா.பரத்

பணம்..!

உயிரற்ற
மனம்
பிணம்!...

உயிருள்ள
பிணம்
பணம்!...

வேண்டும் மாற்றம்!....

நம் கால்கள் தரையை கண்ண்டால்
காலனியை தேடும்!...

செருப்பு தைக்கும் தொழிலாளியின் கால்களோ
தரையை முத்தமிட்டுக்கொண்டே செல்கிறது !......

நம் மானம் காக்க பல உயிர்களை
கொன்று ஆடை நெய்யும் நேசவன்!...

நம் ஆடம்பர வாழ்க்கைக்காக
அவன் உயிரையும் எடுக்க துணிந்துவிட்டோம்!...

உழவன் பட்டினியுடன்
சேற்றில் கால்வைத்தால் தான்!...

நாம் பசியாற
சோற்றில் கை வைக்க முடியும்!..

நம் வீடு பிரகாசிக்க
உயிரை துச்சமாக நினைத்தான்
மின் தொழிலாளி!...

இருந்தும் என்ன பயன்
அவள் பிள்ளைகள் இன்னமும்
மெழுகுவர்த்தி ஏற்றித்தான் படிகிறார்கள்!...

என்ன கொடுமை பார்தீர்கள,
உன்ன உணவுகொடுததவனுக்கு
உணவில்லை,

உடுத்த ஆடை நெய்தவனுக்கு
ஆடை இல்லை,

இது மாறுமா?

உண்மை காதல்..!

உதட்டைவிட்டு சென்றாலும்,
உள்ளத்தைவிட்டு நீ செல்வதில்லை !...


கண்ணைவிட்டு சென்றாலும்,
கனவைவிட்டு நீ செல்வதில்லை !...


மண்ணைவிட்டு நான் சென்றாலும்,
மனதைவிட்டு நீ செல்வதில்லை !...


கவிபிரியன் பா.பரத்

தகப்பன் சாமி!...

என் முதல் கனவும் நீ
என் முதல் கடவுளும் நீ !

என் முதல் நண்பன் நீ!
என் முதல் நாயகனும் நீ !

என் முதல் ஆசிரியர் நீ!
என் முதல் ஆசையும் நீ!

என் வாழ்வின் அகராதியும் நீ !
என் வாழ்கையின் அர்த்தமும் நீ!

மொத்தத்தில்
என் தகப்பனும் நீ!

சாமியும் நீ !!!
தகப்பன் சாமி!...

-அப்பா

அவள் பெயர் கவி


பொதுவாக காதலியை பிரித்தால்தான்,
கவிந்ஞர் ஆவர்கள்!...

நானோ உன்னை சேர்ந்த காரனத்தலே
கவி ஆகிவிட்டேன்!....

இப்போது நானும் கவி
நீயும் கவி !.....

நட்பும் காதலும்

நட்புடன் கொண்ட
மோகம் காதல் !!!!

மோகம் இல்லா
காதல் நட்பு !!!!

கிறுக்கல்..!

பிடித்துவிட்டால்
குழந்தையின்
கிறுக்கல் கூட

ஓவியம் தான் ......!

நான் கடவுள்

என்னால் பாதிக்கப்பட்டவர்கள் என்னை வெறுக்கின்றனர்

என்னால் பயனடைந்தவர்கள் என்னை நேசிக்கின்றனர்...

இந்த இரண்டையும் புரிந்தவர்கள் நான் யார் என்கின்றனர் ?


நான் கடவுள் !!!!........

தோழி..!

காதலியுடன் பேசும் போது
நேரத்துடன் சண்டை போட்டேன்
போகதே என்று !..... 

தோழியுடன் பேசும் போது
நேரம் என்னிடம் சண்டை போட்டது
பிரியாதே என்று!....

கவிதை !....



என்னின்
சில மெய்யான
வார்த்தைகளுக்கு
நான்   இட்டபெயர்  

கவிதை !....

சிநேகிதா...!

சி.ந்தித்த 

நே.ரமெல்லாம் 

கி.டைத்த 

தா.ய் 


சிநேகிதா

‪நிச்சயிக்கப்பட்ட விபச்சாரம்‬...!















அவள் 18 வயதை கடந்தால் என்பதை
அறிந்துகொண்ட சில புரோக்கர்கள்..!

வாரம் ஒருவர் என்ற கணக்கில்
தொடர்ந்து இருவாரம் வந்துசென்ற..!

பணம் படைத்த எட்டு பேரில்
ஒருவர் அவளை தேர்ந்தெடுத்தான்..!

தலைநிறைய பூ புதுப்புடைவை கட்டி
அவளை சந்தித்தான் நேருக்குநேர்..!

வசதி படைத்தவன் சரி என்றானாம்..!

புன்னகையுடன் புரோக்கர் சொன்ன வார்த்தையால்
வாயடைத்து நின்றால் அவள் வார்த்தையின்றி..!

அவளுக்கு தமிழ் வார்த்தை தந்து
உதவாததை வேட்கமென்றனர்; உடனிருந்தவர்கள்..!

பின் புரோக்கர்கள் முன்னிலையில் முடிவுசெயயப்படது
பணமும், இடமும், நேரமும்...!

அந்தநாளுக்கு மாதங்கள் சில காத்திருக்கக
வேண்டுமென்றார்கள்; அவள் வேண்டியும் இருந்தால்
என்றும் பேசாத பேச்சியம்மனிடம்..!

ஒருநாளுக்கு காத்திருக்க முடியாத அவன்
அலைபேசியிலேயே பாதி வாழ்கையை வாழ்ந்துவிட்டான்..!

அவளுக்கு விருப்பம் உள்ளதா என்றரியாமலயே
வந்தது அவனுள் அந்த நாளும்..!

நிலவும் வந்தது அவளும் வந்தால்
தனியறையில் அவனும் அவளும் தனிமையில்..!

இப்போது அவள் மனம் துடிக்கிறது
காதல் திருமணத்தின் சிறப்பு..!


இது நிச்சயிக்கப்பட்ட விபச்சராம்..!