Friday, March 25, 2016

தீபாவளி..!

உயர்ந்துவிட்டது காய்கறியின் மதிப்பு
காகிதத்தின் மதிப்பும் சேர்ந்துயர்ந்தது...!

உயர்ந்தது தங்கத்தின் மதிப்பு
அதன் தாகமும் சேர்ந்துயர்ந்தது...!

உயர்ந்தது வாகனங்களின் மதிப்பு
வாங்குபவர்களின் மதிப்பும் சேர்ந்துயர்ந்தது...!

உயர்ந்தது உணவுகளின் மதிப்பு
உண்பவர்கள் மதிப்பும் சேர்ந்துயர்ந்தது...!

உயர்ந்தது ஆடைகளின் மதிப்பு
கடைகளின் எண்ணிக்கையும் சேர்ந்துயர்ந்தது...!

உயர்ந்தது வாடகையின் மதிப்பு
வசிப்பவர் எண்ணிக்கையும் சேர்ந்துயர்ந்தது...!

இப்படி
உயர்ந்தமனிதர்கள்
ஏணியில் ஏறி
உயர்ந்துகொண்டே
செல்கிறார்கள்...!

ஆனால்,
அவர்கள்
ஏறிச்சென்ற
ஏணியில்
படிகட்டுகளாகிருந்த
பாட்டாளியை
மறந்துவிட்டார்களா ????
அல்ல
மறந்தது போலும்
நடிக்கிறார்களா????
தெரியவில்லை....!

யார்
எவரை
மறந்தாலும்
காலம் தம்
கடமையைச்செய்ய
தவறியதில்லை....!
  
பலகாரக்கடையில் கூட்டம்
பட்டாசு கடையில் கூட்டம்
துணிக்கடையில் கூட்டம்
திரையரங்குகளில் கூட்டம் ..!
நகை கடைகளில்கூட கூட்டம் .....!

ஆம் தீபாவளி வந்துவிட்டது....!

ஆனால் ஏனோ எனக்கு மட்டும்
இன்னும் தீபாவளி வரவில்லை....!

நான் தான் காலையில்
நீங்கள் போடும் குப்பையை சுத்தம்செய்பவன்...!

நான் தான் உங்கள் வீட்டில்
தினசரி நாளிதழ் அளிப்பவன்..!

நான் தான் நீங்கள்
அணிந்திருக்கும் ஆடையை நெய்தவன்...!

நான் தான் நீங்கள் போகும்
திரையரங்குகளில் சீட்டு கிழிப்பவன்..!

நான் தான் நீங்கள் உண்டுகளித்த
எச்சத்தை எடுத்துச்செல்பவன் ....!

நான் தான் நீங்கள் உறங்குவதற்கு
உறங்காமல் நான் உங்கள்வீட்டின் முன்...!

என்னை பற்றி பேச ஆரம்பித்தால்
நிச்சயம் நேரம் பத்தாது...!

இது பெருமை அல்ல

"வறுமை"

No comments:

Post a Comment