Friday, March 25, 2016

தேடிய காதல் இங்கே....!

என்னவனே ....!!!

என்னுள்
நீ மட்டும் ஆட்சி
செய்துவரும் நேரத்தில்
இன்னும் ஒரு நபர்
தயாராக உள்ளார்...!

அடி அழகி...!

என்று கட்டிப்பிடித்தபடி,
புலம்புகிறான்...!

என்னை தோல்வி சாய்த்தபோதெல்லாம்
உன் தோளில் சாய்த்துக்கொண்டாய்...!

என் கண்கள் அழுதபோது
உன் விரல்களால் துடைத்துவிட்டாய்...!

என் இதழ் புன்னைகைக்கும் போது,
உன் இதழால் முத்தமிட்டாய்...!

என் கால்கள் வலிக்கும்போது
உன் கைகளால் பிடித்துவிட்டாய்...!

நான் விழிக்கும்முன்
நீ விழித்துவிடுகிறாய்...!

நான் உறங்கிய பிறகுதான்,
நீ உறங்குகிறாய்...!

இப்படி
எல்லாவற்றிலும்
என் பாதியாகிய நீ...!

சரி பாதியாக
இருக்கும் பொது...!

ஈரைந்து மாதம்
சுமக்கும் சுமையை..!

ஓரைந்து மாதம்
சுமக்கும் வாய்ப்பு கூட
எனக்கு இல்லையே???

இந்த நற்செய்தியை
ஏற்ற பிறகும்
என் மனம்
வலிக்கிறது??????

அட முட்டாள் கணவா?
அவ்வளவு சுலபமாக உன்னை
விட்டுவிடுவேன் என்று நினைத்தாயா?????

நம்பிள்ளையை நான் சுமந்தாலும்,
எங்கள் இருவரையும் சேர்த்து
நீ தான் சுமக்கவேண்டும்...!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
தூக்கு என்னை ???
என்று சொல்லி

நெற்றியில் முத்தமிட்டாள்...!

No comments:

Post a Comment