உன்வருகைக்காக நாட்கள் பல
காத்திருந்தேன் நான் ..!
செல்வனாக நீ பிறந்தால்
உன் முதல் நண்பன் நான்...!
செல்வியாக நீ பிறந்தால்
உன் முதல் அன்பாளன் நான்...!
என்னவளின் தாய்மைக்கும்,
என்னின் ஆண்மைக்கும்,
அடையாளம் தந்தது நீ...!
நேற்றுவரை நமக்கிடையில்,
யாரும் வரமுடியாதென்ற...!
உன் தாயின் கர்வமிக்க பேச்சை,
நான் இருகிறேன் என்று அடக்கிவிட்டாய்...!
நாளை முதல்
பாசத்திலும் சரி,
பாயிலும் சரி,
எங்களுக்கிடையில் இனி நீ...!
நேற்றுவரை என்னவளுக்கு
மட்டும் தலையனயாகிருந்த நான்....
நாளை முதல் உனக்கும்...!
ஒவ்வொரு இரவும் இனி ,
தூங்காமலே விடியும்..!
பல நாட்கள் முத்தமிடும்போது
உன் தாய் சொல்லி கேட்காத நான்
இன்று நீ பிறக்கும் முன்பே கேட்டுவிட்டேன்....!
கோபத்தில் என்னவள்...!
இன்றுமுதல் உனக்காக நான்
மீசை இல்லாத அப்பாவாக....!
No comments:
Post a Comment