Friday, March 25, 2016

காத்து நிற்கிறேன்

உனக்காக
காத்திருந்த
நாட்களைவிட....!

உன்னை
காத்து நின்ற
நாட்கள் தான்
அதிகம்...!

அன்று
வருவாய்
என்று
காத்திருந்தேன்...!

இன்றோ
வரப்போவதில்லை
என்பதால்
காத்து நிற்கிறேன்...!

கரணம்...!
காதலுக்கு
காத்திருக்கத்தான்
தெரியும்...!


காயப்படுத்த அல்ல...???

No comments:

Post a Comment