Friday, March 25, 2016

நான் செய்த சாதனை...!

நான்
கண்டகனவு
பலிக்கவில்லை
மாறாக
பழி தீர்த்தது..!

சோகத்தில்
மூழ்கியிருந்த
பலரையும்..!

பாசப்பட்டினியில்
இருந்த
சிலரையும்...!

பட்டென்று
பாசத்தில்
மூழ்கவைத்து
நான்
மூச்சுத்திணறினேன்
தனிமையில்...!
இது அவர்
பிழை அல்ல..!

நான்
செய்த வினை..!

விளையாட்டாய் இருந்தேனா ???
இல்லை
வித்தியாசமாய் இருந்தேனா ???
இன்றைக்கும்
விளங்கவில்லை..!

பிறர் கண்ணீர் துடைக்க
என் விரல்கள்...!

பிறர் சாய்ந்து அழ
என் தோள்கள்...!

இல்லை என்று
நானிருக்க
இல்லாதவர்காக
நான்...!

Machan Happy Birthday Day Da...!

என்ற நண்பரின் வார்த்தையில்
உணர்ந்தேன்..!

ஆண்டுகள்
பல ஆகிவிட்டான...!

வயதும்
பலமுதிர்ந்துவிட்டன..!

காலம் குறைவு
செய்ய வேண்டிய
சேவை அதிகம்..!

ஒவ்வொரு நாளும்
யாருக்காவது உதவவேண்டும் என்று
விழிக்கும் என் விழிகள்

யாருக்கும் உபத்திரம் செய்யவில்லை
என்று ஆறுதலுடன் மூடுகிறது...!

"தற்காலிமாக"


மொத்தத்தில்.....

பெற்றவர்களை
பட்டினிபோட்டதும்...!
ஆசைக்கு தீனி
போட்டதும் தான்

நான் செய்த சாதனை...!

No comments:

Post a Comment