Tuesday, March 29, 2016
Friday, March 25, 2016
தியாகம்..!
உருவமில்லா
காதல்
உருகித்தவிக்கிறது....!
தீக்குச்சியின்
தியாகம்
புரியாத
மெழுகுவர்த்தியை
நினைத்து....!
- வினோத்
- வினோத்
காதல் மலர் ..!
என்னவளே
நமக்காக
இதழ் பிரித்த
காதல் மலர்
இன்று
இதழ் உதிர்த்து
மண் சேர்ந்தது.....!
முடியாதென
தெரிந்தும்
முயற்சித்துக்கொண்டே
இருக்கிறேன்
உதிர்ந்த
இதழை
உரிய
மலரிடம்
சேர்க்க.....!
- வினோத்
- வினோத்
நினைவு...!
நினைவு...!
ஒவ்வொரு
நிமிடமும்
உன்னை
மறக்க
நினைகிறேன்...!
மறந்தும் விடுகிறேன்...!
மறக்க
நினைக்கும்
நினைவை...!
தங்க மீன்கள்...!
உன்வருகைக்காக நாட்கள் பல
காத்திருந்தேன் நான் ..!
செல்வனாக நீ பிறந்தால்
உன் முதல் நண்பன் நான்...!
செல்வியாக நீ பிறந்தால்
உன் முதல் அன்பாளன் நான்...!
என்னவளின் தாய்மைக்கும்,
என்னின் ஆண்மைக்கும்,
அடையாளம் தந்தது நீ...!
நேற்றுவரை நமக்கிடையில்,
யாரும் வரமுடியாதென்ற...!
உன் தாயின் கர்வமிக்க பேச்சை,
நான் இருகிறேன் என்று அடக்கிவிட்டாய்...!
நாளை முதல்
பாசத்திலும் சரி,
பாயிலும் சரி,
எங்களுக்கிடையில் இனி நீ...!
நேற்றுவரை என்னவளுக்கு
மட்டும் தலையனயாகிருந்த நான்....
நாளை முதல் உனக்கும்...!
ஒவ்வொரு இரவும் இனி ,
தூங்காமலே விடியும்..!
பல நாட்கள் முத்தமிடும்போது
உன் தாய் சொல்லி கேட்காத நான்
இன்று நீ பிறக்கும் முன்பே கேட்டுவிட்டேன்....!
கோபத்தில் என்னவள்...!
இன்றுமுதல் உனக்காக நான்
மீசை இல்லாத அப்பாவாக....!
தேடிய காதல் இங்கே....!
என்னவனே ....!!!
என்னுள்
நீ மட்டும் ஆட்சி
செய்துவரும் நேரத்தில்
இன்னும் ஒரு நபர்
தயாராக உள்ளார்...!
அடி அழகி...!
என்று கட்டிப்பிடித்தபடி,
புலம்புகிறான்...!
என்னை தோல்வி சாய்த்தபோதெல்லாம்
உன் தோளில் சாய்த்துக்கொண்டாய்...!
என் கண்கள் அழுதபோது
உன் விரல்களால் துடைத்துவிட்டாய்...!
என் இதழ் புன்னைகைக்கும் போது,
உன் இதழால் முத்தமிட்டாய்...!
என் கால்கள் வலிக்கும்போது
உன் கைகளால் பிடித்துவிட்டாய்...!
நான் விழிக்கும்முன்
நீ விழித்துவிடுகிறாய்...!
நான் உறங்கிய பிறகுதான்,
நீ உறங்குகிறாய்...!
இப்படி
எல்லாவற்றிலும்
என் பாதியாகிய நீ...!
சரி பாதியாக
இருக்கும் பொது...!
ஈரைந்து மாதம்
சுமக்கும் சுமையை..!
ஓரைந்து மாதம்
சுமக்கும் வாய்ப்பு கூட
எனக்கு இல்லையே???
இந்த நற்செய்தியை
ஏற்ற பிறகும்
என் மனம்
வலிக்கிறது??????
அட முட்டாள் கணவா?
அவ்வளவு சுலபமாக உன்னை
விட்டுவிடுவேன் என்று நினைத்தாயா?????
நம்பிள்ளையை நான் சுமந்தாலும்,
எங்கள் இருவரையும் சேர்த்து
நீ தான் சுமக்கவேண்டும்...!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
தூக்கு என்னை ???
என்று சொல்லி
நெற்றியில் முத்தமிட்டாள்...!
தாயாக மாற ஆசை....!
அலுவலகம் வந்ததிலிருந்தே
அவன் நினைவே...!
அதிகாலை எழுந்ததும்
அரை தூக்கத்தில்
அசையும் உன்னை
அணைத்த பிறகே
அடுத்த வேலை எனக்கு...!
உன் முகம்
சிரிக்கக்கண்டால்..!
என் மனம்
சில்லென்றாகும்...!
சிணுங்குமுனை
சிரிக்கவைக்க
சிறுபிள்ளையாய்
சில மணிநேரம்
சிதறியது...!
நேரமொதுக்கிய விளையாட்டை
நேரம்மறந்து விளையாடியதால்..!
நேரத்திற்கு வெளியே செல்லாமல்
நேரந்தவறி பேருந்து நிலையத்தில்....!
நிற்காமல்
பயணிக்கும்
நேரத்தை முந்திச்செல்ல ....!
நின்றுகொண்டு
பயணிக்கிறேன்
பேருந்தில்...!
நேரத்தை முந்த!....
வேகமாய் ஓடும் நேரத்தை
மெதுவாக கூடமுந்தமுடியாமல்
ஊர்ந்து வருகிறது பேருந்து,,,!
பின் ஓடத்தொடங்கினேன்
ஓட்டப்பந்தயத்தில் அல்ல
நேரப்பந்தயத்தில்...!
ஒருவழியாய்
வழிப்போக்கரின்
உதவியுடன்
உரித்த நேரத்தில்
அலுவலகத்தில்...!
இப்போதிருந்தே
மனம் ஏங்குகிறது
மாலைப்பொழுதை தேடி...!
இப்படிப்பட்ட வேளையில்தான்
மனைவியை கண்டு
மனம் பொறாமை கொள்கிறது....!
அவ மட்டும் நாள் முழுக்க
பிள்ள கூட சந்தோசமா இருக்க?????
கொடுத்து வெச்சவ?????
இசையின் காதலன்
உன்னை
கையிலெடுத்து
கட்டியணைத்து....!
இதழோடு
இதழ்சேர்த்து...!
என் மூச்சு காற்றை
உனக்களிகும்போது தான்
இசை பிறக்கும்....!
புல்லாங்குழல்....!
மாமா ஐ லவ் யு டா !!
அன்று என் தாய்
அடுக்களையில் இருக்க...!
என்னை கட்டியணைத்து
என் காதில்பயத்துடன்
என்னவள் முணுமுணுத்தது....!
இன்றுவரை என்
இதயத்தைவிட்டு
இறக்கவில்லை...!
"மாமா ஐ லவ் யு டா"
தீபாவளி..!
உயர்ந்துவிட்டது காய்கறியின் மதிப்பு
காகிதத்தின் மதிப்பும் சேர்ந்துயர்ந்தது...!
உயர்ந்தது தங்கத்தின் மதிப்பு
அதன் தாகமும் சேர்ந்துயர்ந்தது...!
உயர்ந்தது வாகனங்களின் மதிப்பு
வாங்குபவர்களின் மதிப்பும் சேர்ந்துயர்ந்தது...!
உயர்ந்தது உணவுகளின் மதிப்பு
உண்பவர்கள் மதிப்பும் சேர்ந்துயர்ந்தது...!
உயர்ந்தது ஆடைகளின் மதிப்பு
கடைகளின் எண்ணிக்கையும் சேர்ந்துயர்ந்தது...!
உயர்ந்தது வாடகையின் மதிப்பு
வசிப்பவர் எண்ணிக்கையும் சேர்ந்துயர்ந்தது...!
இப்படி
உயர்ந்தமனிதர்கள்
ஏணியில் ஏறி
உயர்ந்துகொண்டே
செல்கிறார்கள்...!
ஆனால்,
அவர்கள்
ஏறிச்சென்ற
ஏணியில்
படிகட்டுகளாகிருந்த
பாட்டாளியை
மறந்துவிட்டார்களா ????
அல்ல
மறந்தது போலும்
நடிக்கிறார்களா????
தெரியவில்லை....!
யார்
எவரை
மறந்தாலும்
காலம் தம்
கடமையைச்செய்ய
தவறியதில்லை....!
பலகாரக்கடையில் கூட்டம்
பட்டாசு கடையில் கூட்டம்
துணிக்கடையில் கூட்டம்
திரையரங்குகளில் கூட்டம் ..!
நகை கடைகளில்கூட கூட்டம் .....!
ஆம் தீபாவளி வந்துவிட்டது....!
ஆனால் ஏனோ எனக்கு மட்டும்
இன்னும் தீபாவளி வரவில்லை....!
நான் தான் காலையில்
நீங்கள் போடும் குப்பையை சுத்தம்செய்பவன்...!
நான் தான் உங்கள் வீட்டில்
தினசரி நாளிதழ் அளிப்பவன்..!
நான் தான் நீங்கள்
அணிந்திருக்கும் ஆடையை நெய்தவன்...!
நான் தான் நீங்கள் போகும்
திரையரங்குகளில் சீட்டு கிழிப்பவன்..!
நான் தான் நீங்கள் உண்டுகளித்த
எச்சத்தை எடுத்துச்செல்பவன் ....!
நான் தான் நீங்கள் உறங்குவதற்கு
உறங்காமல் நான் உங்கள்வீட்டின் முன்...!
என்னை பற்றி பேச ஆரம்பித்தால்
நிச்சயம் நேரம் பத்தாது...!
இது பெருமை அல்ல
"வறுமை"
மழலை மொழி
கடவுளை விட..!
காதலை விட....!
சொந்தங்களை விட...!
சொத்துக்களை விட....!
பல கோடி பணத்தை விட...!
பணம் தரும் பதவியை விட....!
பெரியது சிறு
மழலையின் சிரிப்பு...!
எதிர் பார்ப்பின்றி
உங்கள் வருகைக்கு
காத்துநிற்கும் மழலைக்கு...!
எதிர்பாராத பரிசொன்று
வாங்கிச்செல்வீர்....!
திருமண வியாபாரம்
கௌரவமென்னும் இலாபத்திற்காக...!
அவள் தந்தை செய்யப்போகும்
திருமண வியாபாரத்திற்கு...!
தன் மானம் விற்று
நான் கொடுத்த முதலீடு
மனம்..!
வியாபாரம் பெருக வாழ்த்துக்கள்....!
காத்து நிற்கிறேன்
உனக்காக
காத்திருந்த
நாட்களைவிட....!
உன்னை
காத்து நின்ற
நாட்கள் தான்
அதிகம்...!
அன்று
வருவாய்
என்று
காத்திருந்தேன்...!
இன்றோ
வரப்போவதில்லை
என்பதால்
காத்து நிற்கிறேன்...!
கரணம்...!
காதலுக்கு
காத்திருக்கத்தான்
தெரியும்...!
காயப்படுத்த அல்ல...???
எதிர்பார்ப்பு
அறிவுரை
இது அறிவுரை அல்ல ...!
வாழ்கையை
அறிந்தபின்
கூறும் உரை....!
எதையோ
எதிர்பார்த்து வருபவரிடம்
எதார்த்தத்தை
எதிர்பார்ப்பது
ஏமாற்றத்தில் தான் முடியும்...!
என் காதலின் முத்தம்
என் காதலின் முத்தம்
தனிமையில்
தயங்கி தயங்கி
இதழோடு இதழ்சேர்த்த முத்தம்...!
காமத்தில் முடிந்தது...!
ஆசையாய்
கன்னத்தில்
கொடுத்த முத்தம்...!
மாலை துணிக்கடையில் பயணித்து...!
இரவு...! Dai I Love You
என்று முடிந்தது...!
சுவாரசியமாக
சண்டைபோடுகையில்
ஆத்திரத்தில்
"உங்க அப்பா வீட்டுக்கே போடி"
என்ற சொன்ன வார்த்தையை
சமாதனம் செய்ய
கட்டியணைத்தபடி நெற்றியில்
கொடுத்தமுத்தம் ...!
உன்முடிவை மாற்றி
அமைதியாக என் மார்பின்
உன்னை உறங்கசெய்தது...!
ஒரே நாற்காலியில்
இருவரும்அமர்ந்து
ஒரே காப்பியை
சிக்கனமாக பருகியபோது
இதழ் சேராமுத்தம்
இன்பத்தில் மூழ்கடித்தது...!
மாதங்கள் சில கடந்து
நீ எடுத்த வாந்தி
பித்த வாந்தியா?
அல்ல
பிள்ளை வாந்தியா?
என்ற குழப்பத்தில்
வீடு திரும்பிய போது
வயிற்றில் கொடுத்த முத்தம்
உனக்கா ...?
இல்லை
நம் பிள்ளைக்கா...?
என்று இன்றுவரை
விடை தெரியாமல் போனது...!
சரியாக எட்டுமாதம் உனக்கு....!
உன் இரு கைகளில் ஒரு கை
வயிற்றில் இருக்கும் நம்பிள்ளை
தாங்கியபடியும் ...!
மற்றொரு கை என்னை தாங்கியும்
நீ நடக்கையில்...!
கைகளில் கொடுத்தமுத்தம்
என்னை கறைய வைத்தது...!
பின் பிரசவ அறையில்
நீ துடிப்பதை பார்த்து
செய்வதறியாமால்
உன்னருகில் இருக்கையில்...!
அழுகை சத்தத்துடன்
இரத்தத்தின் நடுவில்
இரத்தினம் ஒன்று கண்டவுடன்....!
உன்னை அணைத்தபோது
உன்கண்களில் வழித்த கண்ணீரோடு
என்கண்ணீர் சேர்ந்ததும்
எனக்கு
முத்தம் தான் கண்ணே...!
இன்று நமக்கிடையில்
பிள்ளை உறங்கும்போதும்
"நம் இதழ்கள் சேர்த்தது"
பிள்ளையின்
ஒருகன்னத்தில் நீயும்
மறுகன்னத்தில் நானும்
கொடுத்த முத்தத்தினால்....!
இது
காமத்தின் முத்தம் அல்ல...!
என்
காதலின் முத்தம்...!
Subscribe to:
Posts (Atom)