Sunday, August 20, 2017

மீண் டும் டும் டும்





















இரட்டை கிளவியாய்,
இருந்த வாழ்விற்கு..
காதல் என்றொரு,
பெயர் சூட்டி,
காரனப் பெயர் தந்தால்...!

பின் காதல் மழையில்,
நனைந்தேன்
இடைவிடாது..!
என்றோ நான் கண்டகணவு..

நிகழ்கால நிஜங்களாக
கண்முன்னே...!

பழையன கழிந்து,
புதியன புகுந்து...
மீண் டும் டும் டும்
ஒரு காதல் கதை...!

காதலுடன் பா.பரத்

Sunday, May 28, 2017

உன்னப்ப(ன்+அ)ம்மா நான்...
















உன்னப்ப(ன்+அ)ம்மா நான்....
என் மகளே !
என்னை நல்ல மகனாக்கியது
உன் தாயின் காதல்..!

என்னை நல்ல மனிதனாக்கியது
உன்னின் காதல் ..!

நான் எதையோ தேடிசெல்லையில்
என்னை தேடி வந்த அழகு
தேவதை நீ.!

தோல்வின் வலியுனர்ந்தவன்,
தைரியமாக செல்
உன் பின்னே நானிருக்கிறேன்..!

காதல் தோல்வியின் வலியுனர்தவன்
உன் காதலுக்கு நானே தூது செல்வேன்..!

சுதந்திரத்தின் ருசி அறிந்தவன்
சுதந்திரமாக பறந்து செல்,
உன் பார்வையில்
நானில்லைஎன்றாலும்
என்பார்வையில்
நீயிருப்பாய்..!
பாசத்தில்..!

வெற்றியின் தாகம் தணிந்தவன்
தயங்காதே முன்னேறு, வெற்றி உனக்கு
மிக அருகில்தான் உள்ளது
என்னைப்போல..!

உன்தாயின் ஆசைகளை
அரை நொடியில் நிவேற்றியவன்..!

பெரிதாய் ஆசைப்படு
உனது ஆசைகளையும்
நிறைவேற்றுவேன்..!

என்னவளை கொஞ்சும் போதும் சரி
என்மகளை கொஞ்சும் போதும் சரி
சமுதாயத்தின் பார்வை மாறியதே இல்லை..!

வேடிக்கையான மனிதர்கள்
வேடிக்கை தான் பார்ப்பார்கள்
அரர்களை பார்த்து ஐயம் கொல்லாதே
என் கவலை மறக்க ஒரு முத்தம் கொடு..!

உனக்காக எதையும்செய்ய
துணிந்தவன் உன் தகப்பன்
துணைவியை கண்டு பயப்படுவதை
கேலி செய்யாதே..!

அவள் என் முதல் குழந்தையம்மா..!
முத்தமிடுகையில் உன் தாய்
சொல்லி கேட்காத நான்
இன்று உனக்காக..!

மீசையில்லாமல்..!

ஒரு மார்பில் உன்னையும்
மறு மார்பில் உன்னன்னையும்
சுமப்பது சுமைதாநென்றாலும்
சுகம்தான்...!

அற்புதமான வாழ்வில்
ஒரு அங்கமாக நான்
உன் அப்பன்...

பாமரன் பா.பரத்
காதலுடன் பா.பரத்

Sunday, March 26, 2017

இடையில் இனி நீ





















நீ பிறக்கும் முன்னே
நான் உனக்கெழுதும்
முதல் கடிதம்..!

நீ இல்லாமலே
உனக்காக வாழ
தொடங்கினேன் நான்..!

கல்லூரி பருவத்தில்
தேதி தள்ளிப்போகையில்
வலியிலிருந்து விடுபட்ட
சந்தோசம்...!

இப்போதெல்லாம்
தேதி தள்ளிப்போகையில்
வலிக்காக காத்திருகிறேன்....!

விழியில் ஈரத்தோடு.....

பலர் நீ கற்பனை
என்றுரைத்த போது
எனக்குள்ளே நான் உன்னோடு
பேசி கொண்டிருப்பேன்
கற்பனையாய்...!

என் கற்பனை கலைத்து
கருவாய் தங்குவதே
நீ எனக்களிக்கும் சந்தோசம்..!

தனிமையில்
நானும் உன் தந்தையும்
ஒருவரை ஒருவர் குழந்தை
என்றழைத்து ஆருதலடைவதும்..

பின்,
இருவரும் தனிமையில்
தனியே கரைவதும்
எங்களுக்கு வாடிக்கை..!

எங்கள் கவலை தீர்க்க
நீ வேண்டாம்,
எங்கள் வாழ்வை தீர்க்கவோ
நீ வேண்டும்..!

என் மனதை பாரமாக்கிய
சுற்றத்தாருக்கு நீ கொடுக்கும்
மதிலடி....

என் வயிற்ரை பாரமாக்குவதே.!

என்மனதை பலர்
கொன்றுவிட்டார்கள்..!

நீ எட்டி உதைக்கையில்
நான் மீண்டும் பிறப்பேன்...!

கருத்தரித்தால்:

உன்வருகைக்காக நாட்கள் பல
காத்திருந்தேன் நான் ..!

செல்வனாக நீ பிறந்தால்
உன் முதல் தோழன் நான்...!

செல்வியாக நீ பிறந்தால்
உன் முதல் தோழி நான்...!

எண்ணின் தாய்மைக்கும்,
என்னவரின் ஆண்மைக்கும்,
அடையாளம் தந்தது நீ...!

நேற்றுவரை நமக்கிடையில்,
யாரும் வரமுடியாதென்ற...!

உன் தந்தையின்
கர்வமிக்க பேச்சை,
நான் இருகிறேன் என்று
அடக்கிவிட்டாய்...!

நாளை முதல்
பாசத்திலும் சரி,
பாயிலும் சரி,
எங்களுக்கிடையில் இனி நீ...!

நேற்றுவரை உந்தந்தைக்கு
மட்டும் தலையனயாகிருந்த நான்....

நாளை முதல் உனக்கும்...!

ஒவ்வொரு இரவும் இனி ,
தூங்காமலே விடியும்..!

பிரியமுடன் பா.பரத்

Friday, March 24, 2017

காதல்..!






















மூன்றெழுத்து வார்த்தையில்
இருவரின் வாழ்க்கை...!
காதல்..!

இருவர் மட்டும்
வாழுமுலகம்
காதல்...!

ஒருவர் மட்டும்
நோகும் உலகம்
காதல்...!

தலைவனும்,
தலைவியும்
சேர்ந்தார்கலென்பது
அல்ல காதல் !

பிரிவிலும்,
பிரியாதிருந்தார்கள்
என்பதே காதல்..!

பிரியமுடன்

பாமரன் பா.பரத்

Wednesday, March 22, 2017

எண்ணிலடங்கா நினைவுகள்...!





















உன்னிழலை நேசித்தாலே என்மீது
கோபம் கொள்பவள் நீ,

உன்னிழலை நேசிக்கவே
தயங்கும்போது...

நீ அல்லாத வேறொரு பெண்ணை,
எப்படி நேசிப்பேன் நான் !!!

நீருக்குள்ளே
காற்று ஒழிந்திருப்பது போல
என்றுமே எனக்குள் என்னவள் நீ..!

ஆண்டுகள் பல ஆயினும்
என்னை ஆண்டு கொண்டிருக்கிறது
உன் நினைவுகள்..!

நீ இல்லாது இருந்தும்
நலமாக நான்..!

எண்ணிலடங்கா எண்ணற்ற
நம் நினைவுகளோடு...!

பாமரன் பா.பரத்

Monday, March 13, 2017

போலியான நான் நிஜமாய்...!


















நிற்க கூட நேரமில்லாமல்
நகர்கிறது நாட்கள்....

ஏதோ ஒரு ஓரத்தில்
நின்று கொண்டிருக்கும்
என்னவள் உன்
நினைவுகளுடன்...!

நீ என்பது நிழலாய்,
நான் என்பது நிஜமாய்,
நாம் என்பது நிவைவுகளாய்,
என்றும் என்னிதயத்தில்....!

போலியான நான்
நிஜமாய் வாழ்கிறேன்..!

பொய்யான நீ
நினைவாய் வாழ்கிறாய்...!

உயிரான நம் காதல்,
கவிதையாய் வாழ்கிறது...!

பாமரன் பா.பரத்

Wednesday, March 8, 2017

வாயாடி













வருடங்கள் பல கடந்தும்
வந்து வந்து செல்கிறது
வாயாடி அவளின்
வண்ண நினைவுகள்....!
நிற்க இடமில்லாமல்...


பாமரன் பா.பரத்


மழை..!


கடைசியாய்
வானம் கதறி அழுதது...!
கையாலாகாத
அரசியல் வாதியிடம்
சிக்கிக்கொண்ட
விவசாயியை நினைத்து...!

கோவையின் வறட்சியை
கொட்டித்தீர்த்த மழை..!

நனைந்த
நினைவுகளுடன்,
நனையாமல் நான்

பாமரன் பா.பரத்

Tuesday, February 14, 2017

காதலின் பிறந்தநாள்..!


காதலின் பிறந்தநாள்..!
இதழோடு இதழ்
சேர்ந்தது...
முத்தம் பிறந்தது..!
இதழோடு இதழ்
பிரிந்தது...
புன்னகை பிறந்தது..!
உள்ளத்தோடு உள்ளம்
சேந்தது..
தேடல் பிறந்தது..!
உள்ளத்தோடு உள்ளம்
பிரிந்தது...
ஊடல் பிறந்தது..!
இவ்வரிசையில்...
உடலோடு உடல்
சேர்ந்தது...
காமம் பிறந்தது..!
அணுவோடு அணு
சேர்ந்தது..
கரு பிறந்தது..!
அந்த
உடலை விட்டு கரு
பிரிந்தது...
மனிதன் பிறந்தான்....!
அப்படியானால்
எப்போது
பிறந்துது
காதல் ????
தாயின் வயிற்றில்
கன்னம் வைத்த
தந்தைக்கு...!
காலசைத்து நாம் தந்த
முதல் முத்தத்தில்
மனிதனுக்குள்
காதல் பிறந்தது..!
எங்கும் காதல்...!
எல்லாம் காதல்...!
காதலுடன்,
பாமரன் பா.பரத்

Thursday, January 12, 2017

வீழ்வோம் மென்று நினைத் தாயோ ?










தமிழ்
பிறமொழிக்கு
எதிரி மொழி அல்ல !


தமிழ் எங்கள்
தாய்மொழி
அதுவே !

தமிழர்கள்
பிறமொழிக்கு
எதிரிகள் அல்ல. !

தமிழர்கள் தமிழுக்கு
தகுதியானவர்கள் 
அதுவே !

தமிழர்கள்
சட்டத்திற்கு
விரோதிகள் அல்ல !

தமிழர்கள்
சத்தியத்தின்
சகோதரர்கள்
அதுவே !

தமிழர்கள்
காலைகளை கொள்ளும்
கொடியவர்கள் அல்ல !


தமிழர்கள் 
கோலைகளை
 வெல்ல
விரும்பாதவர்கள்
அதுவே !

தமிழர்கள்
அடங்கிப் போவது
வலிமையின்றி அல்ல !

தமிழர்கள்
வாய்மையின் வழி
நிற்பவர்கள்
அதுவே!
  
மௌனம் பேசும்
ஊமைகள் கூட
வலித்தால்
ஒலி எழுப்புவர்...!

தமிழ் மொழி தாங்கிய
தமிழர் மரவர்கள்
திருப்பியடிக்கத்
தயங்காதவர்கள் !

அடக்கத்தெரிந்தது
திமில் சிலிர்த்து
சீறிப்பாயும் காலைகளை
மட்டு அல்ல !

சில்லரைத்தன்மாய்
திரியும் சில அரசியல்
கோலைகளையும் தான் !

சிந்தித்து  பயணப்படு
உயிரைவிட மானம்
பெரிதென்கின்ற
மானத் தமிழர்கள்
வாழும் பூமி!

-தமிழன்
பாமரன் பா.பரத்