Sunday, March 26, 2017

இடையில் இனி நீ





















நீ பிறக்கும் முன்னே
நான் உனக்கெழுதும்
முதல் கடிதம்..!

நீ இல்லாமலே
உனக்காக வாழ
தொடங்கினேன் நான்..!

கல்லூரி பருவத்தில்
தேதி தள்ளிப்போகையில்
வலியிலிருந்து விடுபட்ட
சந்தோசம்...!

இப்போதெல்லாம்
தேதி தள்ளிப்போகையில்
வலிக்காக காத்திருகிறேன்....!

விழியில் ஈரத்தோடு.....

பலர் நீ கற்பனை
என்றுரைத்த போது
எனக்குள்ளே நான் உன்னோடு
பேசி கொண்டிருப்பேன்
கற்பனையாய்...!

என் கற்பனை கலைத்து
கருவாய் தங்குவதே
நீ எனக்களிக்கும் சந்தோசம்..!

தனிமையில்
நானும் உன் தந்தையும்
ஒருவரை ஒருவர் குழந்தை
என்றழைத்து ஆருதலடைவதும்..

பின்,
இருவரும் தனிமையில்
தனியே கரைவதும்
எங்களுக்கு வாடிக்கை..!

எங்கள் கவலை தீர்க்க
நீ வேண்டாம்,
எங்கள் வாழ்வை தீர்க்கவோ
நீ வேண்டும்..!

என் மனதை பாரமாக்கிய
சுற்றத்தாருக்கு நீ கொடுக்கும்
மதிலடி....

என் வயிற்ரை பாரமாக்குவதே.!

என்மனதை பலர்
கொன்றுவிட்டார்கள்..!

நீ எட்டி உதைக்கையில்
நான் மீண்டும் பிறப்பேன்...!

கருத்தரித்தால்:

உன்வருகைக்காக நாட்கள் பல
காத்திருந்தேன் நான் ..!

செல்வனாக நீ பிறந்தால்
உன் முதல் தோழன் நான்...!

செல்வியாக நீ பிறந்தால்
உன் முதல் தோழி நான்...!

எண்ணின் தாய்மைக்கும்,
என்னவரின் ஆண்மைக்கும்,
அடையாளம் தந்தது நீ...!

நேற்றுவரை நமக்கிடையில்,
யாரும் வரமுடியாதென்ற...!

உன் தந்தையின்
கர்வமிக்க பேச்சை,
நான் இருகிறேன் என்று
அடக்கிவிட்டாய்...!

நாளை முதல்
பாசத்திலும் சரி,
பாயிலும் சரி,
எங்களுக்கிடையில் இனி நீ...!

நேற்றுவரை உந்தந்தைக்கு
மட்டும் தலையனயாகிருந்த நான்....

நாளை முதல் உனக்கும்...!

ஒவ்வொரு இரவும் இனி ,
தூங்காமலே விடியும்..!

பிரியமுடன் பா.பரத்

No comments:

Post a Comment