Saturday, April 23, 2016

கல்யாண பரிசு


கய்யாலாகாதவனின் கவிதை














எத்தனயோ மதங்கள் இருந்தும்,
ஏகப்பட்ட கடவுள் இருந்தும்...!

ஒருவருடைய உதவியும்
கிட்டவில்லை....!

பள்ளிக்கு செல்லவேண்டிய
என் பிஞ்சுகள்...!

காலமாகி கல்லறையில்
கிடக்கிறார்கள்....!

வண்ணத்துப் பூச்சி போல
வட்டமிடவேண்டிய
என் பிள்ளைகளை...!

கூண்டில் அடைத்திருந்தால்
கூட பரவா இல்லை...!

கூண்டோடு அளித்துவிடார்கலே...?

நேற்றுவரை
நாளை என்பதைஅறியாது
சுவாசித்த பிள்ளைகளின்
சுவாசம் இன்று இல்லை..!

இது யார் தவறு?
யாரை கேள்வி கேட்பது?

அழுதுகொண்டே
பள்ளிக்கு சென்ற பிள்ளைகளை
அழுதபடியே கல்லறையில்
அடக்கம் செய்த பெற்றோர்க்கு
ஆறுதல் கூற வார்த்தை ஏதும் இல்லை...!

காயம் பட்ட உங்கள் இதயங்களுக்கு
கய்யாலாகாதவனின் கவிதை வரிகள்..!

Friday, April 22, 2016

கமல் தாசன்...!
















சமுதாய சாக்கடையை 
சுத்தம் செய்ய  
துடிக்கும் சிலரில் 
என்னைப்போல் ஒருவன்

நீ...!


இந்த துப்புரவு பணியில் 
உன்னை பின்பற்றும் பலரில்
உன்னை போல் ஒருவன்

நான்...!

பகுத்தறிவு தசவதாரமாக நீ...!
கமலறிவு கோவிந்தராஜக நான் ..!

கடவுள் இல்லை என்ற
அன்பே சிவம் நீ...!

கடவுள் உண்டு என்று
நல்ல சிவம்  நான்...!

கலைக்கு விசுவாசியாக  நீ..!
உன்னை ரசிக்கும் விசுவாசி 
விஸ்வனாதாக நான்...!

மக்களை மகிழ்விக்கும்
புன்னைகை மன்னன் நீ...!

அதை ரசிக்கும்
செல்லப்பா  நான்...!

மொத்தத்தில் 
மனிதனை  நேசிக்கும்
நாத்திகன் நீ...!

கமலை நேசிக்கும்
நல்லான் நான்...!

கமல் தாசன்...!


Sunday, April 17, 2016

சாலை தாபிமானம்









சாலையில் செல்லும் மனிதன்
குறுக்கே வந்த நாய்க்கு வழிகொடுத்து
மனிதர்க்கு வழிகொடுக்க மறுக்கிறான்!!!

தன் நாய்தாபி மானத்தை காப்பாற்றிக்கொண்டு
மனிதாபிமானத்தை தவறவிட்டான்..!

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று நடக்குது
ஒவ்வொரு சாலை சைகை விளக்கு முற்றத்திலும்..!
என் பாரதிக்கு அன்றே புலப்பட்டது!

முந்தி செல்பவனை முந்தநினைக்கும் மனிதன்
பிந்தி வருபவனை மனிதனென்றே நினைப்பதில்லை ..!

அற்ப மனிதனாக எண்ணாவிட்டாலும் சரி,
ஒரு உயிர் என்று கூட எண்ணமில்லை....

இப்படி நடுத்தர சண்டைகள் ஒரு புறம் இருக்க...

மகிழுந்தில் செல்லும் நண்பர்கள்,
என் மனிதர்களை தீண்டாமல் செல்ல நினைகிறார்கள்...!

மனிதாபிமானத்தின் அடிப்டையில் அல்ல
மகிழுந்தாபி மானத்தின் அடிப்படையிலேயே....
தீண்டாமல் இருப்பினும்  தீண்டாமை நன்று !

உங்கள் அகராதியில் இந்த வார்த்தை தொலைந்திருந்தால்
சற்று யோசித்து மீண்டும் சேர்த்துக்கொள்ளுங்கள்

மனிதாபிமானம்!!!

Saturday, April 9, 2016

காதல் பரிசு



















காதலியுடன் ஒரு நொடி வாழ்ந்தால் போதும்
என்று ஒருதலை காதலில் மட்டும் அல்ல !!!!!

முதல் சந்திப்பில் மனம்நெகிழ்ந்து
தோழமையின் பின்சென்று,

அவன் மனதை அவளும்
அவள் மனதை அவனும்,

நன்கு புரிந்து கொண்டு
பின் ஒரு நாள் தன்னை அறியாமல்,

கண்களில் வெட்கமும்
இதலில் புன்னகையும்
மனதில் படபடப்புடன்
காதலை பரிமாறி,

பின் குடும்ப உறவுகளை பற்றி பரிமாறி
ஒரு நிமிடம் கூட உன்னை பிரிய மாட்டேன்
என்று அன்பின் எல்லையை தொட்டு,

மேடை இல்லை
மந்திரம் இல்லை
நாள் நட்சத்திரம் பார்க்கவில்லை,

திருமணத்திற்கு சாட்சியான
மஞ்சள் தாலியும் இல்லை,
நீயே என் சாட்சி என்று கூறி
அன்று முதல் என்னை கணவா கணவா
என்று வாய் நிறைய சொல்லி
கடைசியில் இதை அனைத்தும்
கனவே என்று
என்னை விட்டு சென்றுவிட்டால் !!!!

இத்தனை சுகங்களை கொடுத்துவிட்டு
அவள் மட்டும் என்னை விட்டு சென்றுவிட்டால்,

இந்த இனிமையான சுகங்கள்
சுமை அதிகமானவை தான்
இருபினும் இதுதான் என் காதலி குடுத்த பரிசு!..

யோசித்து பாருங்கள் ஒரு நொடியுடன்
ஒப்பிடும் பொழுது

இது எவ்வளவு இனிமையானது என்று

கொஞ்சல் !

கொஞ்சல்
















என் முதல் எதிரி ,
உன் கோபம்!...

என் நெருங்கிய நண்பன்,
உன் கொஞ்சல்!...

எதிரி வரும்போதெல்லாம்,
சண்டை வரும்!..

சண்டையை சமாதானம் செய்ய,
என் நண்பன் வருவான்!...

எதிரி நான்
காத்திருகிறேன்

நண்பன் உனக்கு ...!

Thursday, April 7, 2016

இரு வரி கவிதை

இரு வரி
கவிதைகள்
நம் காதல்.....!

என்னில்
தொடங்கி
உன்னில்
முடிவதால்.....!

உனக்கு
தொடக்கமாக
நானும்
எனக்கு
முடிவாக
நீயும்.....!

- வினோத்

Saturday, April 2, 2016

முத்தத்தில் வாழ்வின் ருசி !

பல நாட்களாக புழங்காமல் கிடந்த காதல்
இன்று புழக்கத்திற்க்கு வந்துள்ளது
உன்னால்..!

காதலின்றி பூட்டிக்கிடந்த மனதை,
பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறாய்..!

புன்னகை மறந்த இதழ்களை
புன்னகைக்க செய்கிறாய்..!

வளம் இழந்த வாழ்வை
வளம்பெற செய்கிறாய்..!

கண்ணீர் துளிகளால் நனைந்திருந்த
கன்னங்களை எச்சில் கொண்டு துடைக்கிறாய்..!

நீ அறியாமல் செய்யும் சிறு அசைவும்
என்னை அறியச்செய்கிறாய்..!

வாழ்வில் அர்தங்கள் இழந்த வேலையில்,
வாழ்க்கைக்கே அர்த்தமாகிறாய்..!

முடியுமா என்ற கேள்விகளுக்கு,
முடியும் என்றே முத்தத்தில் பதிலளிக்கிறாய்..!

நினைவுக்கெட்டிய நினைவுகள்யாவும்
நினைவில் இல்லை உன்னால்..!

ஆயிரம் காதல்களில்
தோல்வி கண்டவனும்
கரைந்திடுவான்..!

புரியாமல் பேசும்
உன் மழலை மொழி முன்...!

நானும் கரைந்தேன்..! கரைகிறேன்..!

மொத்தத்தில்
ஒற்றை முத்தத்தில்
வாழ்வின் ருசியை
அறியவைத் -தாய் நீயே...!

என் மகளே..!
- ஆதிரா

ஒருத்தியின் செல்ல மகள்













அலுவலகத்திலிருந்து வேகமாய்
வீடுதிரும்ப நினைத்த என்னை...!

ஊர்வலம்போல் ஊர்ந்து வரச்செய்தது
எனக்கு முன்சென்ற
மழலையின் சிரிப்பு...!

தெரிந்த பலர் சொல்லாமல்
விலகும் நேரத்தில்,
தெரியாத இந்த மழலை
கையசைத்து டாட்டா என்றதும்
மனமுருகிப்போனது...!

மங்கையர் பலரிடம்
கிடைக்காத காதலை,

சட்டென்று கொடுத்துவிட்டால்
முகம்தெரியாத மங்கை
ஒருத்தியின் செல்ல மகள்..!

சிரிப்பு என்னும் மந்திரத்தால்...!

அன்புடன்,
பாமரன் பா.பரத்