Friday, November 11, 2016

என்னவள் நீ...


எண்ணிலடங்கா
எண்ணங்கள் பல
என்னுள்
இருக்கையில்...

என்னைமறந்த
நிலையிலும்
என்னவள் நீ...

நினைவுகளாக !!


பா.பரத்

Saturday, November 5, 2016

ஆடம்பரக்கொலை....












காலையில் என் துயில் 
கலைக்கும் குருவி.

இன்று கவலையுடன் 
தத்தளிக்கிறது தெருவில்
தன் தாயுடன்..!

குருவிக்கோ கூடில்லை
எனக்கோ உறவில்லை..!

பசித்தபோதெல்லாம்
எனக்குணவளித்த
என்கிழவியை இன்று
 
காலையிலிருந்து
காணவில்லை..!

தொண்டை வரண்டபோதெல்லாம்
இளநீர் வெட்டிக்கொடுக்கும்
நரை கிழவனும் இன்றில்லை..!

அமைதியின்றி
அமைதியான
 
சாலையில் தனியே
 
செல்லும்போது
என்னை கட்டித்தழுவிய
என்காதலும் இன்றில்லை...!

ஞாயிறு என்னை சுட்டெரிக்கையில்
என்னை அரவனைத்துக்கொண்ட
என்னன்னையும் இன்றில்லை..!

சாலையில் சொல்லும்போது
இருபுறமும் நின்றிகொண்டிருந்த
 
என் உறவுகள் யாரும்
 இன்றில்லை...!

ஆம், 
எல்லாம் முடிந்தாயிற்று
வெட்டியும் வீழ்த்திவிட்டார்கள்
வித்தும் தின்றுவிட்டார்கள்..!

உயிரிழந்தும் காத்திருகிறது..!

மானம்கெட்ட மானுடர்
சமூகத்திற்கு உதவிட....!

வெட்டியபின் பேசுவதில் அர்த்தமில்லை
வெட்டிப்பேச்சில் மதிப்பில்லை
பணம் பேசுகையில் மறுப்பில்லை..!
இதுவே என் சமூகம்...!

தடுக்க நாதியின்றி
மரமென்றோயிரை
வெட்டிவீசியபோது
வெட்கமேயின்றி
வெடிகைப்பார்த்த
உங்களில் ஒருவன்
நான்..

பாமரன் பா.பரத்..!

Friday, October 21, 2016

மானம் கெட்ட சமுதாயத்தில்

கருவறையில் கருவாய் 
தங்கியதுமே,
கல்லறையில் பிணமாய் 
தூங்குவதும்,
கட்டாயமான ஒன்று!

பிறப்பது யாராயினும்
பிரிவது உறுதி.
உலகைவிட்டு !

பிறகு ஏன் இந்த பிரிவினை ?

உருக்கமாயிருந்த 
உடையவரும்,
உற்சாகமாயிருந்த 

உறவினரும்,
ஒரு நொடி 

சிந்தித்தே 
சிரித்தனர்...

பிறந்தது பெண் குழந்தையென்றதால்...



தாயின் வயிற்றிலிருந்து
பிறந்த குழந்தையை...

வயிற்றுக்கு கீழேபார்த்து,
வாழும் தகுதி உறுதிசெய்கிறார்கள்,
வயிற்றுக்கு மேலே இதயம் இல்லாத,
வாயடி வயோதிகர்கள் சிலர்..

வாழ்வை வாழ தெரியாமல் வாழ்ந்த,
வாழாவெட்டி உறவினர்களும்
அதிலடங்கும் !...

பல வெட்டி சத்தங்களுக்கிடையில்...
என் தாய் மலட்டுத்தன்மையற்றவள்,
என்பதை உலகுக்கு உரக்க சொன்ன,
குட்டி தேவதையின் அழுகிறாள் !...

பூமிக்கு வந்த புது மலர்,
தோட்டத்தில் பூத்த புன்னகை பூ..

என் மகளே!
எழுந்துவா!..
எதிர்கொள்!..
எதிர்த்து நில்!

உன் விரலசைவில்
இவ்வுலகம் உனதாகும் !

ஆண்டுகள் பல கடந்ததும்,
நீயும் பாராட்டப்படுவாய்......

இதே மானம் கெட்ட சமுதாயத்தில்.....

பாமரன்.பா.பரத்

Thursday, September 29, 2016

என் ஒற்றை பல் கிழவி !
















சதை தொங்கிய,
தள்ளாடும் வயதில்,
தனியே நடந்து செல்லும்,
என் கிழவி !

பல்லில்லா பொக்கைகளுக்கு,
மத்தியில் ஒற்றை பல்லுடன்,
என் கம்பீரக் கிழவி !

காலத்தை கடந்து,
கைத்துணையாய் நிற்கும்,
கைத்தடியை மட்டும் நம்பி,
என் கிழவி !

அதே கிழவி,
சாலையைக்கடக்க
வேண்டுமென்று ஒரு
அசாதாரண ஆசையில் !

நடுங்கியவாறு,
நகரத் தொடங்கியது,
கிழவியின் கால்கள்!
கால்களை வாரிவிடும்
கள்வர்கள் வாழும்,
இப் பூதவுலகில் !

இடறிவிடாத
சாலைகளிருந்தும்,
கீழே விழுந்தால்,
என் பச்சைக் கிழவி!

பட்டயப் படிப்பு முடித்தும்
பாட்டியிடம் எப்படி நடந்து
கொள்ளவேண்டுமென்று தெரியாத
கல்லூரி இளைஞன் !

அவன்
வாங்கிய பட்டம்
வெறும் காகிதமேயன்று
அறிவு அல்லல் !

ஏன், எதற்கு, எப்படி !
இவை அறிவியல்,
அறிவின் ஆன்மா !

இவைமூன்றும் சிந்திக்காமல்,
ஏதோ ஒரு பாதையில்,
வேகமாய் பயணப்படும்,
என் சமகால சகோதரா !

இதை சிந்திக்கவும் !

வேகமும்,
ஆடம்பரமும்,
விஞ்ஞான உலகின்
அத்தியாவசிய தேவைகளில்
ஒன்றாகிவிட்டது !

உங்கள் வேகத்தில் வீரியம் இல்லை!
உங்கள் ஆடம்பரத்தில் அர்த்தம் இல்லை!
இதுவே நிதர்சன உண்மை !

தள்ளாடும் கிழவிக்கு
கைகொடுத்தவன் அல்ல நான் !

அவரை பயமுறுத்தாமல்,
அவர் பின்னே ஊர்ந்து சென்றவன் !
பொறுமையில் பெருமிதம் கொண்டேன்,

நான் பாமரன் பா.பரத்

Saturday, September 24, 2016

ஆடை-நிர்வாணம்


பழமை மறந்து,
பண்பாடு மறைத்து,
அரைகுறை ஆடையணிந்து,
ஆடை-நிர்வாணமாக,
வீதியில் செல்லும்,
சில பெண்களுக்கு !

நீங்கள் சுதந்திரம் கேட்பது
ஆண்களிடமிருந்தா ?
ஆடையிடமிருந்தா ?
ஆண்களிடமிருந்து என்றால்
ஆடையை கூட்டச் சொல் !

ஆடையிடமிருந்து என்றால்
தூக்கில் தொங்கச் சொல் !





ஆடைகளைந்து பெண்ணுடலை
பார்க்கத்துடிக்கும் ஆண்கள் சிலரே உண்டு !

ஆடையனிந்து உடல்காட்டும்
பெண்ணுடலை குருடர் அல்லாத
எவரும் தீண்டுவர் !

என் பாட்டான் தொண்டு செய்து,
பழுத்த பழம் இன்று இருந்திருப்பின்,
இத்தீண்டாமையை விரும்பியிருக்கக்கூடும் !

அன்று,
வீட்டிலிருந்த பெண்களை
வெளியே வரச்சொன்னான் பாரதி !

இன்று,
வெளியே சென்ற பெண்களை
வீட்டிற்கு உள்ளே செல்ல அழைக்கிறேன்
நான் பா.பரத்

Saturday, August 13, 2016

பிணம் என்றழைக்கும் இவ்வுலகம்






















ன்னை காத்த உடல் ,
நீ நோவது 
காணமுடியாமல்
நான் கரையும் 
தருணம்
உன்னை பிணம் 
என்றழைக்கும்
இவ்வுலகம்...

என்னுடலே பிரிந்தேன்
நான் உந்தன் உயிரே.....

பிரியம் வைத்தேன்
பிரியாதிருப்பேன் என்றேன்

எவன் அழைத்தும் செல்லாதிருந்த நான்,
எமன்  அழைத்ததால் செல்கிறேன்..

மகளே!!

நீ பிறக்கும் முன்னே
உன்னை பார்த்தவள்  நான் !


பிறந்த உன்னை பிரிகிறேன்,
பத்திரமாய் பார்த்த்துக்கொள்
உன் தகப்பனை !

நீ பிறக்கும் வரை
அவனே என் முதல் குழந்தை..!

Thursday, July 28, 2016

முயற்சிசெய்














முடியவில்லையென்றால்,
முற்றுப்புள்ளியிட்டு,
முடித்துவிடாதே,

முயற்சிசெய்.

முடியும்வரையல்ல,
முடிவு தெரியும் வரை

முடியும் உன்னால்...

Tuesday, July 12, 2016

ஆடு என்கின்ற இறைச்சி !


கறியாகப்போகும் ஆட்டிற்கு
வழிவிடும் மனிதா !

கனவோடு சாலையில்,
உன்னை கடந்து செல்லும்,
சக மனிதருக்கும் வழிகொடு..!

ஆட்டின் உயிரை விட,
மனிதனின் கனவு உயர்ந்தது !

ஆட்டு இறைச்சியை காட்டிலும்,
ருசியானது என் மானுடரின் கனவு ..!

- பாமரன்.பா.பரத்

Thursday, June 30, 2016

ஆணுறை !

ஆணுறை அணிந்து உறவு கொள்ளென்று,
அரசாங்கமும், மருத்துவர்களும் சொல்கிறார்கள்..!

கையுறை அணிந்து சாக்கடை சுத்தம்செய்
என்று சொல்ல ஒரு பன்றி இல்ல..!

பேசாத பன்றிகளுக்கிடையில்,
எழுதும் நாய்.


பாமரன் - பா.பரத் குமார்

Wednesday, June 1, 2016

நான் கிறுக்கிய காதல் ஓவியம்

முத்தமிட்ட மழலையின்,
எச்சில் ஈரம்  கன்னத்தில்
ஒட்டிக்கொண்டது போல்....!

உன்னிடமிருந்து விலகியும்,
நெஞ்சில் ஒட்டிக்கொண்டிருக்கிறது,
காதல்....!

நான் இல்லாத நீயும் !!!
நீ இல்லாத நானும் !!!
நாம் இல்லாத காதலும்!!!

மழலையின் ஓவியம் போல் !

சிலருக்கு கிறுக்கலாகவும்,
சிலருக்கு ஓவியமாகவும்,
காட்சியளிக்கும்....!

நான் கிறுக்கிய என்
காதல் ஓவியம்


என்னவள் நீ...!

Monday, May 23, 2016

ஓர் நாள் இரவு...

நிலவிற்காக
தன் சிறகை
விரித்தது
வானம்.....!

சிறகின்
நிழலில்
தங்களையும்
இணைத்தன
நட்சத்திரங்கள்.....

குளிர்
தென்றல் பட்டதும்
வெட்கத்தில்
மலர்ந்தன
பூக்கள்.....!

தன்
துணை தேடி
அகவியது
மயில்.....!

அனைத்தையும்
மறக்கச்செய்தது
என் கன்னத்தில்
உன் இதழ்
பதித்த

முத்தம்......!


 - வினோத்

Monday, May 16, 2016

எல்லாமே உன் நினைவு

இரவெல்லாம்
கண் விழித்து
உன் நினைவில்
வாழ்கிறேன்.....

நான்
உறங்கிய பின்
இதமாய்
என் தலை
கோதுகிறாய்
நிலவாய்......


 - வினோத்