Tuesday, January 12, 2016
Sunday, January 10, 2016
தெருவுக்கு வந்த காமராஜர்..!
தெருவுக்கு வந்த காமராஜர்..!
ஏழைகளின்
தெய்வமாக வாழ்ந்த இந்த மா.மனிதனை பாடப்புத்தகத்தில்
பாடமாக வைத்து
இருந்தால் பரவாயில்லை இப்படி வியாபாரத்துக்கு பயன்படுத்தி அசிங்க படுத்துகிறார்களே
இவரைகளை யார் கேள்வி கேட்பது..?
யாருடைய அனுமதி
பெற்று தனியார் விளம்பரத்தில் காமாராஜர் படத்தை வைத்தார்கள்..?
வியாபாரத்துக்கு
நடித்த நடிகரா அவர் ?
இதற்க்கு இந்த
அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது..?
அவரை பெயரை
சொல்லி ஒரு குழந்தைக்கு பாடம் சொல்லிக்கொடுத்திருந்தால்
மகிழ்ச்சி
அடைந்திருக்கலாம்..!
அவரை பற்றி பேச
சொல்லிகொடுக்க எண்ணற்ற பண்புகளும் தகவல்கள் இருந்தும்,
வேட்டி
விக்கத்தான் பயன்பட்டது என் தலைவன் செல்வாக்கு...!
என்ன கொடுமையான
இழி செயல் இது....
மனசே Think Please.........
Friday, January 8, 2016
இரவின் மடியில்..!
பூச்சிகள் இசை இசைக்க,
தெரு நாய்கள் அலற,
மிகவேகத்தில் வாகனங்கள் பறக்க...
கார்மேகங்கள் என்னை கட்டியணைக்க
நடுக்கத்துடன் தொடங்கியது
என் நள்ளிரவு..!
இதுவரை யாரிடமும்
இரவல் வாங்காத நான்..!
இரவிடம் இரவல்
கேட்டு நிற்கிறேன்..!
சற்று தாமதமாக விடி என்று..!
இரவுகளுக்கு என்னை கடன்காரனக்க
விருப்பமில்லை..!
அதனால் தான் என்னவோ..!
சீக்கிரமே விடிந்து விடுகிறது..!
விடயலை தேடி பலர் காத்திருக்க
நானோ சற்று ஓய்வெடுக்க
காத்திருக்கிறேன் இரவின் மடியில் ..!
மழலையின் சிரிப்பில் கிடைக்காத இன்பமும்,
மதுவில் கிடைக்காத போதையும்..!
என் விழியோரம் ஓடியது
தண்ணீராக..!
நான் உறங்காமல்
விழித்திருந்த இந்த இரவுகள்
இரவல் வாங்கப்பட்டவை அல்ல..!
நான் எனக்காக விழிதிறந்து
காணும் கனவுகள்..!
நான் விழித்துறங்கும் வரை..!
என் விழி திறந்திருக்கும் வரை..!
இந்த கனவு
கலையவோ
களவு போகவோ
வாய்ப்பில்லை..!
என்றும் நான்
இரவல் பிள்ளையாய்,
இரவின் மடியில்..!
Subscribe to:
Posts (Atom)